அப்பாவுக்கு ஆசையாக பிரியாணி ஊட்டி விட்ட கவிஞர் சினேகன்.. வைரலாகும் வீடியோ..

Published : Jul 01, 2024, 04:55 PM IST
அப்பாவுக்கு ஆசையாக பிரியாணி ஊட்டி விட்ட கவிஞர் சினேகன்.. வைரலாகும் வீடியோ..

சுருக்கம்

பிரபல பாடலாசிரியர் சினேகன் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து தனது தாயின் நினைவு தினத்தை அனுசரித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கவிஞர், நடிகர், அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவர் சினேகன். தமிழ் சினிமாவில் முன்னணி கவிஞர்களில் நடிகர் சினேகனும் ஒருவர். புத்தம் புது பூவே என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடலாராசிரியராக அறிமுகமான சினேகன் இதுவரை 2500க்கும் மேற்பட்ட பாடல்களை  எழுதி உள்ளார்.

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள், தோழா தோழா, ஆடாத ஆட்டமெல்லாம், கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா, பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை, ஞாபகம் வருதே, ஆராரிராரோ நான் இங்கே இங்கே பாட என ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த நூற்றக்கணக்கான பாடல்களை சினேகன் எழுதி உள்ளார்.

PD : ஏற்கனவே 5 படம்.. இப்போ ஆறாவது.. 2024ல் சக்க போடு போடும் "மைக்கேல் ஜாக்சன்" - புது பட அப்டேட் இதோ!

யோகி, உயர்திரு 420, கோமாளி, பூமி உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்ற சினேகன் 2-வது இடத்தை பிடித்தார். மேலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் போட்டியிட்ட சினேகன், 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 

இதனிடையே 2021-ம் ஆண்டு நடிகை கன்னிகாவை சினேகன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கன்னிகா தனது யூ டியூப் சேனாலில் சமையல் வீடியோக்கள் உள்ளிட்ட பல வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்த வாரம் CWC நிகழ்ச்சிக்கு ஏன் வரல? தவித்து போன ரசிகர்கள்.. ஷாலின் ஜோயா சொன்ன பதில்..

இந்த நிலையில் சினேகன் தனது சொந்த ஊரில் தனது குடும்பத்தினருடன் தனது தாயின் நினைவு தினத்தை அனுசரித்துள்ளார்.. பிரியாணி உள்ளிட்ட உணவுகளை சமைத்து தனது தாய்க்கு படையலிட்டு, குடும்பத்தினருடன் வணங்குகிறார். மேலும் தனது தந்தைக்கு பிரியாணியை ஊட்டியும் விடுகிறார் சினேகன். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரன்வீர் சிங்கின் கடைசி 6 படங்கள்: பிளாக்பஸ்டரை விட பிளாப்கள் அதிகம்
ஹீரோவாகும் முன்பே ஷாக் கொடுத்த அகிரா நந்தன்: பவன் கல்யாண் ஏன் சிரித்தார்?