Thangalaan Update: காத்திருக்கும் தரமான சம்பவம்! 'தங்கலான்' படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்!

By manimegalai a  |  First Published Jul 1, 2024, 2:35 PM IST

நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ்... இவர் இசையமைத்துள்ள 'தங்கலான்' படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றை கூறியுள்ளார்.
 


நடிகர் விக்ரமை வைத்து, இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியுள்ள திரைப்படம் 'தங்கலான். சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், தற்போது பிரபல நடிகரும், இப்படத்திற்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் வேற லெவல் அப்டேட் ஒன்றை கூறியுள்ளார்.

விக்ரம் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்த போதிலும், கூட... ஒரு தனி ஹீரோவாக தன்னுடைய வெற்றி படைப்பை கொடுக்க கடந்த சில வருடங்களாகவே மிகவும் போராடி வருகிறார் விக்ரம். எனவே சீயான் தற்போது மிகவும் நம்பி இருக்கும் திரைப்படம் 'தங்கலான்' படத்தை தான். 

Tap to resize

Latest Videos

undefined

என்ன ஆச்சு? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிகர் சங்கம் சார்பில் நடந்த முக்கிய ஆலோசனை..! வெளியான அறிக்கை!

இந்த படத்திற்காக, காடு, மலை, சுட்டெரிக்கும் வெய்யில், வலி, வேதனை, எலும்பு முறிவு என பல கஷ்டங்களை தாங்கி உள்ளார். KGF பட பாணியில் தங்கம் எடுக்கும் தொழிலாளர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில்,  மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் விக்ரமுக்கு தேசிய விருதை பெற்று தரும் என, சிலர் ஏற்கனவே ஆருடம் கூறியுள்ள நிலையில் தற்போது ஜிவி பிரகாஷ் இப்படம் குறித்து போட்டுள்ள எக்ஸ் தள பதிவு வைரலாகி வருகிறது.

காமெடி நடிகர் விஜய் கணேஷ் மகன் விஜயகுமார் - காவியா திருமண வரவேற்பு! ஏராளமான பிரபலங்கள் நேரில் வாழ்த்து!

ஜிவி பிரகாஷ் கூறியுள்ளதாவது, "தங்கலான் படத்தின் பின்னணி இசை பணிகள் முடிந்து விட்டன. இந்த படத்தின் பின்னணி இசையை என்னால் முடிந்த அளவு சிறப்பாக போட்டுள்ளேன். இது என்ன ஒரு திரைப்படம்.. இந்த திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அது மட்டும் இன்றி பிரமிக்க வைக்கும் ட்ரெய்லர் மிக விரைவில் வெளியாக உள்ளது. அதை பார்க்கும் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். 'தங்கலான்' திரைப்படம் இந்திய சினிமாவின் ஒரு பெருமைக்குரிய படம்" என கூறியுள்ளார்.

bgscore completed … have given my best … what a film ❤️…. Looking forward to…..And what a terrific trailer is on ur way soon ur gonna be mind blown . Indian cinema get ready for

— G.V.Prakash Kumar (@gvprakash)

 

click me!