என்ன ஆச்சு? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிகர் சங்கம் சார்பில் நடந்த முக்கிய ஆலோசனை..! வெளியான அறிக்கை!

Published : Jul 01, 2024, 01:50 PM IST
என்ன ஆச்சு? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிகர் சங்கம் சார்பில் நடந்த முக்கிய ஆலோசனை..! வெளியான அறிக்கை!

சுருக்கம்

நட்சத்திர கலை விழா நடத்துவது குறித்த முக்கிய ஆலோசனைக்காக, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ரஜினிகாந்திடம் இன்று ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் இதுகுறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.  

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், கடந்த 5 வருடங்களாக நடைபெற்று வந்த புதிய கட்டிடம் கட்டும் பணி போதிய பணம் இல்லாமல் அப்படியே நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே இந்த கட்டிடம் கட்ட பணம் கொடுத்து உதவிய பல பிரபலங்கள் மீண்டும் பணம் கொடுத்து உதவ முன்வந்தனர். அதன்படி, கமல், ரஜினி, சிவகார்த்திகேயன், நெப்போலியன், தனுஷ் உள்ளிட்ட பலர் தங்களுடைய சொந்த வைப்பு நிதியில் இருந்து தங்களால் முடிந்த பணத்தை கொடுத்து உதவினர்.

தற்போது புதிய கட்டிடத்தின் பணிகள் 80 சதவீதம் வரை, முடிவடித்துவிட்ட நிலையில்....  மீதம் 20 சதவீத பணிகள் மட்டுமே உள்ளதாகவும், அவற்றை முடிக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

காமெடி நடிகர் விஜய் கணேஷ் மகன் விஜயகுமார் - காவியா திருமண வரவேற்பு! ஏராளமான பிரபலங்கள் நேரில் வாழ்த்து!

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து முக்கிய ஆலோசனை ஒன்று நடைபெற்றுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, "தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் திரு.கார்த்தி, துணைத் தலைவர்கள் திரு.பூச்சி எஸ்.முருகன், திரு.கருணாஸ் ஆகியோர் இன்று (01.07.2024) போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். 

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களான திரு.ரஜினிகாந்த் அவர்களிடமும் மற்றும் திரு.கமல்ஹாசன் அவர்களிடமும் ஆலோசனை பெறுவது வழக்கம். அந்த வகையில் அடுத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ள நட்சத்திர கலை விழா குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்கள். வேகமாக நடைபெற்று வரும் நடிகர் சங்க கட்டிடப் பணிகள் குறித்து ஆர்வமாக கேட்டறிந்த திரு.ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் நேரில் வந்து கட்டிடப் பணிகளைப் பார்வையிட உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். என கூறப்பட்டுள்ளது. 

காதல் மனைவி ஹனி மூன்! காற்று கூட நுழைய முடியாத நெருக்கம்; களைகட்டும் பிரேம்ஜி-யின் குடும்ப வாழ்க்கை! போட்டோஸ்

ரஜினியை சந்தித்த நடிகர்சங்க உறுப்பினர்கள்... இன்னும் ஓரிரு நாட்களில் கமல்ஹாசனையும் சந்தித்து நட்சத்திர கலை விழா குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஒரே நாளில் போட்டிபோட்டு ஒளிபரப்பாகும் 2 ஆடியோ லாஞ்ச்.... ஜனநாயகன் - பராசக்தி இடையே முற்றும் மோதல்
'டாக்ஸிக்' படத்தின் அடிபொலி அப்டேட்... ஹூமா குரேஷியின் 'எலிசபெத்' ஃபர்ஸ்ட் லுக் இதோ