Radhika Dance Viral Video : வரலட்சுமி சரத்குமாரின் திருமண கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், அதில் நடிகை ராதிகா டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவி சாயாவுக்கும் மகளாக பிறந்தவர் தான் வரலட்சுமி. தற்போது சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் வரலட்சுமி, திருமணத்திற்கு தயாராகி வருகிறார். அவரது திருமணம் ஜூலை 2ந் தேதி நடைபெற உள்ளது. திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் தற்போது ஜோராக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அவரின் மெஹந்தி பங்க்ஷன் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
இதில் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். வரலட்சுமியின் திருமண கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட நடிகை ராதிகா சரத்குமார், தன்னுடைய மூத்த மகள் ரயானே மிதுன் உடன் குத்தாட்டம் போட்டுள்ளார். அப்போது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ரயானே மிதுன், தனக்கு ஒரு டான்சிங் பார்ட்னர் கிடைத்துவிட்டதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... 2024-ல் தடுமாறும் தமிழ் சினிமா.. 6 மாதம் ஓவர்; வெளியான 124 படங்களில் வெறும் 6 தான் ஹிட்; அவை என்னென்ன?
நடிகை வரலட்சுமி, நிக்கோலாய் என்பவரை தான் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தற்போது குடும்பத்தினர் கிரீன் சிக்னல் கொடுத்ததால் இருவரும் கரம்பிடிக்க உள்ளனர். நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் ஆவார். அவருக்கு 13 வயதில் மகளும் இருக்கிறார். நிக்கோலாய் மும்பையில் ஆர்ட் கேலரி ஒன்றை நடத்தி வருகிறார்.
மகளுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய ராதிகா சரத்குமார் pic.twitter.com/8tE1WJFiH2
— Asianetnews Tamil (@AsianetNewsTM)வரலட்சுமி - நிக்கோலாய் ஜோடியின் திருமணத்தை தொடர்ந்து பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் ஏற்பாடு செய்துள்ளனர். அதில் திரையுலகம் மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களுக்கு வரலட்சுமி சரத்குமார் நேரில் அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... சொந்த ஊரில் பிரம்மாண்ட கனவு இல்லம்.. பார்த்து பார்த்து புதிய வீட்டை கட்டி வரும் மாதம்பட்டி ரங்கராஜ்..