- Home
- Gallery
- 2024-ல் தடுமாறும் தமிழ் சினிமா.. 6 மாதம் ஓவர்; வெளியான 124 படங்களில் வெறும் 6 தான் ஹிட்; அவை என்னென்ன?
2024-ல் தடுமாறும் தமிழ் சினிமா.. 6 மாதம் ஓவர்; வெளியான 124 படங்களில் வெறும் 6 தான் ஹிட்; அவை என்னென்ன?
2024-ம் ஆண்டின் முதல் பாதி முடிவடைந்துள்ள நிலையில், இந்த ஆறு மாதங்களில் 124 திரைப்படங்கள் வெளியாகி அதில் வெறும் 6 படங்கள் தான் வெற்றியடைந்து உள்ளதாம்.

Captain miller, ayalaan
2023ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. அந்த ஆண்டு டாடா, அயோத்தி, போர் தொழில், ஜோ என ஏராளமான சிறு பட்ஜெட் படங்கள் பெரியளவில் வெற்றியடைந்ததால் தமிழ் சினிமா வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் 2024-ல் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. இந்த வருடம் தமிழ் சினிமாவுக்கு இதுவரை ஒரு சோகமான ஆண்டாகவே அமைந்திருக்கிறது.
Tamil Movies 2024
அதற்கு முக்கிய காரணம் வரிசையாக வெளிவரும் தோல்வி படங்கள் தான். இந்த ஆண்டு தொடக்கத்தில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் போன்ற பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் ஆனதால், கோலிவுட் முதல் மாதத்திலேயே பாக்ஸ் ஆபிஸில் சிக்சர் அடிக்கப்போகிறது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உண்மையில் அந்த இரண்டு படங்களும் கிளீன் போல்டு ஆனதால் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.
hit and flop movies of 2024
சரி தனுஷ், சிவகார்த்திகேயன் தான் சொதப்பிவிட்டனர், ரஜினியாவது வந்து காப்பாற்றுவார் என்று பார்த்தால் அவரது படத்தின் நிலைமை படு மோசமாக அமைந்தது. அவர் நடித்த லால் சலாம் திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் அட்டர் பிளாப் ஆனது. அதனுடன் போட்டிபோட்டு ரிலீஸ் ஆன மணிகண்டன் நடித்த சிறு பட்ஜெட் திரைப்படமான லவ்வர் படம் லால் சலாம் படத்தை அசால்டாக வீழ்த்தி வெற்றி கண்டது.
Aranmanai 4
பிப்ரவரி மாதத்துக்கு பின்னர் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக மார்ச், ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்கள் தமிழில் ஒரு பெரிய படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. அதன்பின்னர் வெளிவந்த விஷாலின் ரத்னம் படமும் வந்த வேகத்திலேயே தியேட்டரை விட்டு தூக்கப்பட்டது. இப்படி நான்கு மாதங்களில் ஒரு பெரிய படம் கூட வெற்றியடையாமல் இருக்க, தமிழ் சினிமாவுக்கு சற்று சந்தோஷத்தை கொடுத்த படம் என்றால் அது சுந்தர் சி-யின் அரண்மனை 4.
இதையும் படியுங்கள்... 4 நாட்களில் 500 கோடியை கடந்த வசூல்... பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் கில்லி மாதிரி சொல்லி அடிக்கும் கல்கி 2898AD
Garudan
இந்த ஆண்டு இதுவரை கோலிவுட்டில் வெளியான படங்களில் 100 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை நிகழ்த்திய படம் என்றால் அது அரண்மனை 4 மட்டும் தான். அதன்பின்னர் கவினின் ஸ்டார் படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. மே மாத இறுதியில் வெளிவந்த சூரியின் கருடன் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து மாஸ் காட்டியது. அதன்பின்னர் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா ரூ.75 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.
Maharaja
இந்த நிலையில், 2024-ம் ஆண்டில் இதுவரை ஆறு மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த 6 மாதத்தில் மொத்தம் 124 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளதாம். அதில் அரண்மனை 4, கருடன், மகாராஜா, ஸ்டார், லவ்வர் உள்பட வெறும் 6 படங்கள் மட்டுமே வெற்றியடைந்துள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஷாக்கிங் ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். எஞ்சியுள்ள 118 படங்களும் வணிக ரீதியாக தோல்வியை சந்தித்து உள்ளதாக அவர் கூறி இருக்கிறார்.
Upcoming movies 2024
இப்படி முதல் ஆறு மாதங்கள் தமிழ் சினிமாவுக்கு மோசமாக அமைந்துள்ள நிலையில் இந்த ஆண்டின் இரண்டாம் பாதி கோலிவுட்டை மீட்டெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அடுத்த ஆறு மாதங்களில் கமலின் இந்தியன் 2, தனுஷ் நடித்த ராயன், விஜய்யின் கோட், சிவகார்த்திகேயனின் அமரன், விக்ரம் நடித்த தங்கலான், சூர்யாவின் கங்குவா, ரஜினிகாந்தின் வேட்டையன், அஜித்தின் விடாமுயற்சி, மணிரத்னத்தின் தக் லைஃப் போன்ற பிரம்மாண்ட படங்கள் வருகின்றன. அவை எந்த அளவு பர்பார்ம் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... அழகூரில் பூத்தவர்கள்... மனைவி நயன் மற்றும் மகன்கள் மீது பாசமழை பொழிந்த விக்னேஷ் சிவன் - லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ