இந்த வாரம் CWC நிகழ்ச்சிக்கு ஏன் வரல? தவித்து போன ரசிகர்கள்.. ஷாலின் ஜோயா சொன்ன பதில்..
இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்காத நிலையில், ஷாலின் ஜோயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

shalin zoya
கேரளாவை சேர்ந்த ஷாலின் ஜோயா மலையாள திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பல மலையாள படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களில் அவர் நடித்து வந்தார்.
Shaalin Zoya
மலையாள குறும்படங்கள் மற்றும் ஆங்கில குறும்படங்களிலும் அவர் நடித்துள்ளார். மேலும் சில மலையாள நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி உள்ளார். எனினும் அவர் பிரபலமானது சின்னத்திரை மூலம் தான்.
Shaalin Zoya photos
ஆட்டோகிராப் என்ற மலையாள சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்த ஷாலின் ஜோயாவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர் ரெட் கார்பெட் என்ற நிகழ்ச்சியில் டான்சராகவும் பங்கேற்றார்.
Shaalin Zoya saree photos
2016-ம் ஆண்டு ராஜா மந்திரி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஷாலின் ஜோயா. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான கண்ணகி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.
Shaalin Zoya photos
இந்த படத்தின் புரோமோஷன் பணியின் போது தான் பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசனை ஷாலின் ஜோயா சந்தித்தார். இருவரும் நண்பர்களாக இருந்த நிலையில் பின்னர் காதலர்களாக மாறினர்.
Shaalin Zoya photos
டிடிஎஃப் – ஷாலின் இருவரும் அவ்வப்போது தங்கள் புகைப்படங்களியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் ஷாலின் போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்றுள்ள ஷாலின் ஜோயாவின் மலையாளம் கலந்த தமிழை ரசிக்கவே தனி ரசிகர் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷாலின் ஜோயா பங்கேற்கவில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்பட்டது.
Shaalin Zoya saree photos
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் புடவையில் இருக்கும் க்யூட் போட்டோக்களை ஷாலின் ஜோயா பகிர்ந்துள்ளார். அவரின் புகைப்படங்களுக்கு லைக்களும், கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.
மேலும் குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏன் வரவில்லை என்றும் தற்போது உங்களின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு தனது உடல்நிலை தற்போது முன்னேறி வருவதாக அவர் பதிவிட்டுள்ளார்.