தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சுவாமி தரிசனம் செய்தார். ரசிகர்கள் சிவகார்த்திகேயனை பார்க்க முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழுந்த இவர், எப்போதுமே தன்னுடைய ரசிகர்கள் மீது அன்பை பொழிவது மட்டும் இன்றி, தன்னுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்படும் ரசிகர்களுடன் சலித்து கொள்ளாமல் போஸ் கொடுத்து அசத்துபவர்.
இந்நிலையில் நேற்று தன்னுடைய 38 ஆவது பிறந்தநாளை சிவகார்த்திகேயன் கொண்டாடிய நிலையில், இவருக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும், 'மாவீரன்' படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஒன்றும் வெளியானது. அதே போல் மாவீரன் ஷூட்டிங் ஸ்பாட்டில், சிவகார்த்திகேயன் கேக் வெட்டி பிறந்தநாள் வீடியோக்களும் வெளியாகி வைரலானது.
'வாரிசு' படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த ஜெயசுதாவுக்கு மட்டும் இத்தனை லட்சம் சம்பளமா?
இந்த நிலையில் இன்று, சிவகார்த்திகேயன் உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தற். மூலவர் , சண்முகர், சத்ருசம்ஹாரமூர்த்தி சன்னதிகளில் சிறப்பு வழிபாடு செய்தார். அதனைத் தொடர்ந்து கோவிலில் இருந்து வெளியே வந்த அவரிடம் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது ரசிகர்கள் செல்பி எடுக்கவும், சிவகார்த்திகேயனை பார்க்கவும் முண்டியடித்து சென்றதால் ரசிகர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது கோவில் வட்டாரத்தில் சில நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
முன்னணி இயக்குனர் படத்தில் இருந்து அதிரடியாக விலகிய விஜய் சேதுபதி..! இது தான் காரணமா?