தரக்குறைவான வார்த்தையை உச்சரித்த பிரபல நடிகர்.. அஜித் குமாரை கண்டிக்கும் தமிழக பாஜக - சர்ச்சையில் துணிவு!

By Raghupati R  |  First Published Feb 17, 2023, 6:29 PM IST

ஓடிடியில் வெளியான படத்தில் பிரபல நடிகர் உச்சரிக்கும் தரக்குறைவான வார்த்தைக்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.


சமீப காலங்களில் இணைய வழி சினிமா திரை (OTT)மூலம் இந்த படங்கள் விரைவில் வெளிவருகின்றன. அப்படி இணைய வழி திரையில் வெளிவரும் வேளையில், நீக்கப்பட்ட காட்சிகளை, வசனங்களை அதில் இணைத்து வெளியிடுகின்றனர். - தமிழக பாஜக.

தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி இன்று வெளியிட்டுள்ள பதிவில்,  திரைப்படங்களை முறைப்படுத்துவதற்கு திரைப்பட சான்றிதழ் வாரியம் செயல்பட்டு வருகிறது. திரைப்படங்கள் வெளியாவதற்கு முன் இந்த வாரியத்தின் உறுப்பினர்கள் இந்த படங்களை பார்வையிட்டு விதிகளின் படி காட்சிகள் உள்ளனவா என்பதை கண்டறிந்து விதிமீறல்கள் உள்ள காட்சிகளை, வசனங்களை நீக்க சொல்லிய பின்னர் மீண்டும் பார்வையிட்டு திரைப்படத்தை வெளியிடுவதற்கான சான்றிதழை அளிப்பார்கள்.

Tap to resize

Latest Videos

திரைப்பட சான்றிதழ் வாரியத்தை பொறுத்த வரை ஆபாசமான, அதிக வன்முறை மிக்க காட்சிகளையும், தரக்குறைவான வசனங்களை மட்டுமே நீக்க சொல்வது வழக்கம். சமீப காலங்களில் இணைய வழி சினிமா திரை (OTT)மூலம் இந்த படங்கள் விரைவில் வெளிவருகின்றன. அப்படி இணைய வழி திரையில் வெளிவரும் வேளையில், நீக்கப்பட்ட காட்சிகளை, வசனங்களை அதில் இணைத்து வெளியிடுகின்றனர்.அதாவது எது தவறு, ஆபாசம், விதி மீறல் என்று குறிப்பிட்டு நீக்கப்பட பரிந்துரைக்கப்பட்டனவோ அவைகளை இணைத்து திரையிடுகின்றனர்.

இது அப்பட்டமாக  சமுதாயத்திற்கு தீங்கிழைக்கக் கூடிய செயலாகும். சமீபத்தில் பொங்கலையொட்டி வெளியான ஒரு பிரபல நடிகர் நடித்த படத்தில் இடம்பெறாத சில காட்சிகளும், வசனங்களும் OTT திரையில் வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அந்த படத்தில் தரக்குறைவான வார்த்தைகளை அந்த பிரபல நடிகரே  உச்சரிப்பது கடும் கண்டனத்திற்குரியது. குறிப்பாக பலமுறை திரைப்பட சான்றிதழ் வாரிய குழுவால் நீக்கப்பட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது சமுதாய சீரழிவுக்கே வழிவகுக்கும்.

இது குறித்து அத்திரைப்படம் தொடர்பான முக்கிய பிரமுகர் ஒருவரிடம் பேசிய  போது, இது போன்ற தகாத, தீய சொற்களை தமிழக இளைஞர்கள் அதிகம் விரும்புவதாக சொன்னது பேரதிர்ச்சியை அளிக்கிறது.சமுதாயத்தை சீர்படுத்த வேண்டிய,முறைப்படுத்த வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது.ஆனால்,தங்களின் பட வெற்றிக்காக, வியாபாரத்திற்காக அடுத்த தலைமுறையை  சீரழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.  இணைய வழி திரைக்கு சில சுயகட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது அரசு. அதை பின்பற்ற வேண்டியது திரை துறையினரின் கடமை.

இதையும் படிங்க..85 ஆண்டுகளாக நடந்து வரும் சமய மாநாட்டுக்கு தடையா.? இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக பொங்கிய அண்ணாமலை

எது தவறு, தீங்கானது, ஆபாசமானது, சட்டத்திற்கு புறம்பானது என்று குறிப்பிடப்பட்டு திரைத்துறையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அகற்றப்பட்டதோ, அதையே வேறொரு வழியில் மக்களிடம் கொண்டு செல்வது துரோகம் அல்லவா? குறிப்பாக தங்களின் ஆதர்ச நாயகர்களாக பாவித்து கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தை சீரழிக்கும் விதத்தில் காட்சிகளோ, வசனங்களோ இடம்பெறாமல் கவனித்து கொள்ள வேண்டியது பிரபல கலைஞர்களின் கடமையல்லவா?. சுய கட்டுப்பாடுகளை விதித்து கொண்டு, சுய தணிக்கைகளை மேற்கொள்ள வேண்டியவர்கள் அரசின் கட்டுப்பாடு இல்லையென்ற ஒரே காரணத்திற்காக சமுதாயத்தை சீரழிக்கலாமா? அதிலும் பிரபலமான நடிகர்கள், இயக்குனர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டாமா?

அரசின் வழிகாட்டுதல்களின் படி, சட்டத்தின் அடிப்படையில் நடக்க வேண்டியது திரைத்துறையினரின் கடமை மற்றும் பொறுப்பு. அதை விடுத்து, பணத்திற்காக வியாபாரத்திற்காக சமூகத்தை சீரழிக்கும் அவலங்களை திணிப்பது கேட்டை விளைவிக்கும்.இருக்கும் சுதந்திரத்தை முறையாக பயன்படுத்துவதே அழகு. இல்லையேல், அந்த சுதந்திரம் கேள்விக்குறியாகி விடும் என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க..Erode East Election : பரோட்டா போடுவதும், வடை சுடுவதும்தான் அமைச்சர்களின் வேலையா.? எடப்பாடி பழனிசாமி அதிரடி !

click me!