
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் பிரின்ஸ். இப்படத்தின் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தை அனுதீப் இயக்கியுள்ளர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா என்கிர வெளிநாட்டு நடிகை நடித்து இருக்கிறார். மேலும் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் உடன் அவர் கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை. ஏற்கனவே இப்படத்தில் இருந்து பிம்பிலிகா பிலாப்பி, ஜெஸ்ஸிகா ஆகிய பாடல்கள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி கடந்த வாரம் வெளியான இப்படத்தின் டிரைலரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வண்ணம் இருந்தது.
இதையும் படியுங்கள்... உழைப்பிற்கேற்ற ஊதியம் கொடுத்தால் போதும்...முன்னணி ஹீரோக்களை மறைமுகமாக தாக்கும் கார்த்தி
இந்நிலையில், பிரின்ஸ் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. அதேபோல் இப்படம் 2 மணிநேரம் 23 நிமிடங்கல் ரன்னிங் டைம்மையும் கொண்டுள்ளதாக படக்குழு அந்த அப்டேட்டில் குறிப்பிட்டுள்ளது.
பிரின்ஸ் திரைப்படம் வருகிற அக்டோபர் 21-ந் தேதி தீபாவளி பண்டிகையயொட்டி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு அதிகாலை 4 மணிக்காட்சி திரையிடப்பட உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் பாலிவுட்டை மிஞ்சிய கோலிவுட்... 2022-ல் வசூலை வாரிக்குவித்த டாப் 5 படங்களின் லிஸ்ட் இதோ
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.