உன்னுடைய ஐபிஎஸ் கனவுக்காக இந்த கோப்பையை ஜெயிப்பேனு, எனக்கு சத்தியம் பண்ணு என சிவகாமி டுவிஸ்ட் வைக்கிறார்.
ராஜா ராணி சீசன் 2வில் ஒருவழியாக மாமியார் வைத்த அத்தனை டெஸ்டுகளையும் தாண்டி சந்தியா தற்போது போலீஸ் ட்ரைனிங்காக வந்திருக்கிறார். இவரை கொண்டு வந்து விடுவதற்காக சரவணன், சிவகாமி, ரவி என அனைவரும் இங்கு வந்திருக்கின்றனர். முன்னதாக இந்த போட்டியில் ஜெயிச்சு கப் வென்றவர்களுக்கு அவர்களது சொந்த ஊரிலேயே போஸ்டிங் போடப்படும் என மேல் அதிகாரி கூறுவதை சிவகாமி கவனிக்கிறார். இதையடுத்து சந்தியாவை அழைத்து இந்த கோப்பையை நீ கட்டாயம் ஜெயிக்க வேண்டும். நீ முழுமையான ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்றால் இதை ஜெயிச்சு தான் ஆக வேண்டும் என உறுதியாக சொல்கிறார். உன்னுடைய ஐபிஎஸ் கனவுக்காக இந்த கோப்பையை ஜெயிப்பேனு எனக்கு சத்தியம் பண்ணு என சிவகாமி டுவிஸ்ட் வைக்கிறார்.
இதை கேட்டு சரவணனும், அவரது அப்பாவும் அதிர்ச்சி அடைய, ஆனால் கொஞ்சம் யோசிக்கும் சந்தியா பின்னர் கண்டிப்பாக இந்த கோப்பையை நான் ஜெயிக்கிறேன் என அவரது அத்தைக்கு சத்தியம் செய்து கொடுக்கிறார். சந்தியாவை கட்டியணைத்து முத்தமிடுகிறார் சிவகாமி. பின்னர் அனைவரும் சாப்பிட கேண்டினுக்கு செல்ல ட்ரைனிங் வந்தவர்கள் மட்டும்தான் இங்கு சாப்பிட வேண்டும் என கூறி சரவணன், ரவி, சிவகாமி மூவரையும் அனுப்பி விடுகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு... இந்த வயசுல ஹனிமூன் வேறயா?...கூட்டுசேர்ந்து பழிவாங்கும் பாக்கியலட்சுமி..
சந்தியாவை பிரிவதை நினைத்து மிகவும் சோகம் அடைகிறார் சரவணன். சந்தியா தனது கனவை வெல்லத்தான் வந்திருக்கிறார் என சிவகாமி சரவணனை தேற்றுகிறார். இந்தப்பக்கம் சந்தியா கேண்டீனுக்குள் கடுமையான போட்டியாளராக களமிறங்கி உள்ள கௌதம், இந்த கோப்பையை கட்டாயம் வெல்லுவேன் என மற்றவர்களிடம் சொல்லுவதை கேட்டு கொஞ்சம் யோசித்தபடி அமர்ந்திருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு...பொன்னியின் செல்வனில் வாய்ப்பளிக்க மறுத்துவிட்டு..நெக்ஸ்ட் ரஜினியை வைத்து மாஸ் படம் எடுக்க தயாராகும் மணிரத்னம்?
பின்னர் சாப்பிட்டு வந்த பிறகு சந்தியா, சரவணன் இடம் உங்களை நான் எப்படி பிரிய போகிறேன் என சோகமாக கூற அவருக்கு ஆறுதல் கூறுகிறார் சரவணன். இருவரும் மாறி மாறி ஸ்வீட் ஊ ட்டிக் கொள்கின்றனர். பின்னர் ஊருக்கு கிளம்புவதை பற்றி சிவகாமி பேச சரவணன் எல்லாம் தயாராக இருக்கிறது எனக் கூறுகிறார். அந்த நேரத்தில் இன்னொரு பயிற்சி பெறும் பெண் வந்து சந்தியாவுடன் கிளாஸ் ஸ்டார்ட் ஆகிறது என கூறுகிறார். சந்தியாவும் சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.