இந்த வயசுல ஹனிமூன் வேறயா?...கூட்டுசேர்ந்து பழிவாங்கும் பாக்கியலட்சுமி...

By Kanmani P  |  First Published Oct 13, 2022, 10:56 AM IST

பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி குடும்பத்தார் மீண்டும் மகா சங்கமத்தில் இணைந்துள்ளனர்.அவர்கள் ராதிகா மற்றும் கோபி ஹனிமூன் சென்ற இடத்திற்கே சுற்றுலா செல்கிறார்கள்.


விஜய் டிவிகள் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் சமூகத்திற்கு மோசமான கருத்துக்களை செய்வதாக விமர்சனங்கள் எழுந்தபோதிலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைபெற்று தான் வருகிறது. தற்போது பாக்கியலட்சுமியின்  கணவர் கோபி தனது முன்னாள் காதலி ராதிகாவை கரம் பிடித்து விட்டார். இதனால் மொத்த குடும்பமும் பெருத்த சோகத்தில் இருக்கிறது. அப்பாவே இனி கிடையாது அம்மா மட்டும்தான் என்கிற நிலைமைக்கு வந்து விட்டனர் பாக்யாவின் மூன்று பிள்ளைகளும். இவர்கள் சோகத்தில் இருக்க, கோபி தன் கனவு நிறைவேறியதையடுத்து இளமைப் பருவத்திற்கே சென்று விட்டார். தற்போது இவர் தனது புது மனைவியுடன் ஹனிமூனுக்கு புறப்பட்டுள்ளார்.

திருமணத்தில் கோபியின் குடும்பத்தார் ராதிகாவை வெகுவாக திட்டி அவமானப்படுத்தியதால் அவர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் ராதிகா.  அதோடு இனியாவுடன் கோபியை நெருங்க விடக்கூடாது எனவும் திட்டம் திட்டுகிறார். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி குடும்பத்தார் மீண்டும் மகா சங்கமத்தில் இணைந்துள்ளனர்.அவர்கள் ராதிகா மற்றும் கோபி ஹனிமூன் சென்ற இடத்திற்கே சுற்றுலா செல்கிறார்கள்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு...பொன்னியின் செல்வனில் வாய்ப்பளிக்க மறுத்துவிட்டு..நெக்ஸ்ட் ரஜினியை வைத்து மாஸ் படம் எடுக்க தயாராகும் மணிரத்னம்?

முன்னதாக இரு குடும்பமும் சந்திக்கையில் கதிர் வீட்டை விட்டு சென்றது. மூர்த்திக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. குறித்து கேள்விப்பட்ட பாக்கியலட்சுமி குடும்பம் அதிர்ச்சி அடைகிறது. பின்னர் கோபியை பற்றி மூர்த்தி மற்றும் தனம் விசாரிக்கிறார்கள். முன்பை போல இருக்கிறாரா மாறிவிட்டாரா எனக்கேட்க பாக்யா அசட்டு சிரிப்பு சிரித்து சமாளித்து விடுகிறார். மறுபடியும் மூர்த்தி எழிலிடம் சென்று அப்பாவை பற்றி கேட்க ஏன் மாமா இப்போது அவரைப் பற்றி எல்லாம் வேண்டாம் என கூறுகிறார். 

இதையடுத்தது சுற்றுலா சென்ற இவர்கள் கோபி தங்கி இருக்கும் அதே ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருக்கிறார்கள். மறுநாள் காலையில் கண்ணன் தூங்கி எழுந்து வருகையில் கோபி இருப்பதை பார்த்து அவரை கட்டி அணைத்துவிட்டு கோபியின் ரூமிற்குள் செல்கிறார் . அங்கு ராதிகா இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் கண்ணன். அக்காவிற்கு துரோகம் செய்கிறீர்களா இதை சும்மா விடமாட்டேன் எனக்கூறி ஓடுகிறார் மிகவும் கோபம் அடையம் ராதிகாவுக்கு அவருக்கு சமாதானம் கூறுகிறார் கோபி. இனிமேல் இப்படி நடந்தால் அவ்வளவு தான் என டென்ஷன் ஆகிறார் ராதிகா. ஒரு ஹனிமூனை நிம்மதியாக கொண்டாட விடுகிறீர்களா என புலம்புகிறார் கோபி.

இதையும் படியுங்கள்... பூவையாரை தொடர்ந்து சொந்தமாக கார் வாங்கிய மற்றுமொரு விஜய் டிவி பிரபலம்... காரின் விலை இத்தனை லட்சமா?

மறுபுறம் கண்ணன் பாக்யாவை கட்டிப்பிடித்த அக்கா உங்களுக்கு போய் கோபி மச்சான் துரோகம் பண்றாரு என அழுகிறார். பின்னர் மூர்த்தியை கோபி ரூமிற்கு அழைத்துச் செல்கிறான் கண்ணன். கோபி மாறும் ராதிகாவை ஒன்றாக பார்க்கும் மூர்த்தி கோபத்தில் கொந்தளிக்கிறார். நான் அவ்வளவு சொல்லியும் நீங்கள் திருந்தல, ரெண்டு பேர் கிட்டயும் பார்த்து பேசிட்டு தானே வந்தேன். இப்படி பண்ணிட்டீங்களே என கோபத்தில் கத்துகிறார் மூர்த்தி. உடனே கோபி இவங்க வேறு யாரும் இல்லை என்னோட பொண்டாட்டி நான் தொட்டு தாலி கட்டுன பொண்டாட்டி என சொல்லி ராதிகாவின் கழுத்தில் இருந்து தாலியை எடுத்துக்காட்டுகிறார். இதனால் மூர்த்தி, கண்ணன் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

click me!