தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவின் படி அனைவரும் சோபாவில் அமர்ந்திருக்க, நான் அப்படித்தான் மற்றவர்களுக்கு வேலை செய்து கொடுப்பேன் என்பது போல பேசுகிறார் ஜி பி முத்து.
தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தற்போது தமிழில் ஆறாவது சீசனை தொட்டுள்ளது. கடந்த ஒன்பதாம் தேதி முதல் கோலாகலமாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். ஒன்பது ஆண் போட்டியாளர்கள், 10 பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்களை களம் இறக்கி உள்ளது பிக் பாஸ் 6.
முதல் இரண்டு நாட்களில் கலகலப்பான சென்று கொண்டிருந்த நிகழ்ச்சி தற்போது சண்டையும் சச்சரவுமாக அதன் வழக்கமான ஆர்வத்தை தூண்டுகிறது. இதில் ஹைலைட் ஜிபி முத்து தான். டிக் டாக் பிரபலமான இவர் சற்று சுவாரஸ்யத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்படுத்தி வருகிறார். இவரிடம் யாரெல்லாம் ஒழுங்கு காட்டுகிறார்களோ அவர்களை தனது பாணியில் கலாய்த்து வருகிறார். ஆனால் இந்த தனலட்சுமிஇடம் தான் மாட்டிக்கொண்டு முழித்து வந்தார்.
மேலும் செய்திகளுக்கு...raja rani 2 : மாமியாருக்காக அதிரடியில் இறங்கும் சந்தியா...இப்படி டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் கொடுத்தா எப்படி?
முன்னதாக இந்த வாரம் கிளப் ஹவுஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜனனி கேப்டனாகவும், ஆயிஷா ஜி பி முத்து, தனலட்சுமி உள்ளிட்டோர் ஆகியோர் பாத்திரம் கழுவும் டீமில் இடம் பெற்றுள்ளனர். முதல் வாரத்திலேயே ஜனனி, ஆயிஷா இருவரும் நாமினேஷன் ஆனதால் அவர்கள் வீட்டிற்கு வெளியில் உள்ள வாழைப்பழ தொட்டியில் தான் தூங்க வேண்டியுள்ளது. பின்னர் விளையாடிய வாசிக்கின் அடிப்படையில் ஆயிஷா ஜி பி முத்து பிறருக்கு வேலை செய்து கொடுக்கிறார் என்பதை வைத்து அவரை நாமினேஷன் செய்தார். இதனால் அவர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் ஜிபி முத்து. பின்னர் ஜி பி முத்துவுக்கும் தனலட்சுமிக்கும் வாக்குவாதம் ஏற்பட அவர் குறித்த விமர்சனங்களை அள்ளி தெளிக்கிறார் தனலட்சுமி. இதனால் உடைந்து அழுகிறார் ஜிபி முத்து.
மேலும் செய்திகளுக்கு..இந்த வயசுல ஹனிமூன் வேறயா?...கூட்டுசேர்ந்து பழிவாங்கும் பாக்கியலட்சுமி...
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவின் படி அனைவரும் சோபாவில் அமர்ந்திருக்க, நான் அப்படித்தான் மற்றவர்களுக்கு வேலை செய்து கொடுப்பேன் என்பது போல பேசுகிறார் ஜி பி முத்து. பின்னர் நீங்கள் நாமினேஷன் ஆக்கியுள்ளீர்கள் என தனலட்சுமி கூற அப்படினா? என சூப்பர் பஞ்ச் கொடுக்கிறார் ஜி பி முத்து.