
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பேமஸ் ஆனது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இதுவரை 2 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது 3-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் இதில் காமெடிக்கு பஞ்சமிருக்காது என்பதால் இதற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
குக் வித் கோமாளி முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும் டைட்டிலை ஜெயித்த நிலையில், தற்போது 3-வது சீசனில் ரோஷினி, அம்மு அபிராமி, ஸ்ருதிகா, கிரேஸ் கருணாஸ், தர்ஷன், வித்யுலேகா ஆகியோர் தற்போது போட்டியாளர்களாக உள்ளனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மிகப்பெரிய பலமே கோமாளிகள் தான். அதன்படி இந்த சீசனில் பிரபல கோமாளியான புகழ் படங்களில் பிசியாக நடித்து வருவதால் கலந்துகொள்ளவில்லை என்றாலும், பாலா, குரேஷி, ஷிவாங்கி, சுனிதா, அதிர்ச்சி அருண், பரத் ஆகியோரின் காமெடி கலாட்டா இந்நிகழ்ச்சிக்கு பலம் சேர்த்துள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சினிமா பிரபலங்களும் அவ்வப்போது சிறப்பு விருந்தினர்களாக வருவதுண்டு. அந்த வகையில் இந்த வாரம் நடிகர் சிவகார்த்திகேயன், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். அவர் நடித்துள்ள டான் திரைப்படம் வருகிற மே 13-ந் தேதி ரிலீசாக உள்ளதால் அதனை புரமோட் செய்யும் விதமாக படக்குழுவினருடன் அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளாராம்.
இதையும் படியுங்கள்... ரூ.1000 கோடியை தாண்டிய வசூல்... கே.ஜி.எஃப் 2 வெற்றியால் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய பிரசாந்த் நீல்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.