திடீர் பரபரப்பு.. புதிய சிக்கலில் மாட்டிய நடிகர் தனுஷ்.. உயர் நீதிமன்ற மதுரை கிளை சம்மன்..

Published : May 03, 2022, 06:10 PM ISTUpdated : May 03, 2022, 06:12 PM IST
திடீர் பரபரப்பு.. புதிய சிக்கலில் மாட்டிய நடிகர் தனுஷ்.. உயர் நீதிமன்ற மதுரை கிளை சம்மன்..

சுருக்கம்

போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக கூறப்படும் வழக்கில் நடிகர் தனுஷ் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக கூறப்படும் வழக்கில் நடிகர் தனுஷ் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.கதிசேரன் மற்றும் மீனாட்சி தம்பதியினர், நடிகர் தனுஷ் தங்களுக்கு மூன்றாவது மகன் என்றும், அவர் தனது சொந்த ஊரை விட்டு வெளியேறி, திரைப்படத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடர சென்னைக்குச் சென்றதாகவும் கூறி மதுரை கிழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  மேலும் கடந்த 2002ம் ஆண்டு பிளஸ் 1 படித்துக் கொண்டிருந்த தங்களின் மகன் கலையரசன் தங்களை பிரிந்து சென்றுவிட்டதாகவும், அவர் தான் தனுஷ் என்ற பெயரில் படங்களில் நடிப்பதாகவும் கடந்த 5 வருடங்களாக தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், அவர்கள் கூறும் தகவல் உண்மையானது இல்லை, எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தனுஷ் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்தார்.இந்த வழக்கு விசாரணையின் போது, இரு தரப்பினரும் தனுஷின் பிறப்பு சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ்களை தாக்கல் செய்தனர். விசாரணை முடிவில், கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்து, மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில் கதிரேசன் தாக்கல் செய்த மனுவை மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நிராகரித்ததையடுத்து, நடிகர் தனுஷுக்கு எதிராக மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தனர். நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து விசாரிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மேலூர் கதிரேசன் தரப்பில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு தொட்ரபாக பதிலளிக்க நடிகர் தனுஷ்க்கு  தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வயதாகிவிட்டதால் தங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மாதந்தோறும் ரூ.68000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நடிகர் தனுஷ் தொடர்ந்து மறுத்து வருகிறார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மாஸ் ஸ்கெட்ச்! இனி தோல்வியே இல்லை! சூர்யாவுக்கு ஹாட்ரிக் ஹிட்டு உறுதி: அதிரடித் திட்டம் என்ன?
சன் டிவி vs விஜய் டிவி : டிஆர்பி வேட்டையில் யார் டாப்பு? இந்த வார டாப் 10 சீரியல் பட்டியலில் அதிரடி மாற்றம்