
வைரமுத்து வெளியிட்ட புகைப்படத்தை டேக் செய்து " கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே என இசை அமைப்பாளர் கங்கை அமரன் விமர்சித்துள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கங்கை அமரனின் இந்த கருத்தை பலரும் பல வகையில் விமர்சித்து வருகின்றனர். பலர் வைரமுத்துவை ஏன் கண்ணனுடன் ஒப்பிட்டீர்கள் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இளையராஜாவின் சகோதரர் இசையமைப்பாளர் கங்கை அமரன் இவர் கடந்த சில ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் அவரது அண்ணன் இளையராஜா அம்பேத்கருடன்- பிரதமர் மோடியை ஒப்பிட்டு புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை எழுதினார் இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. சட்டமேதை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கருடன் மோடியுடன் ஒப்பிடுவதா என்றும், வைரமும் உப்புக் கல்லும் ஓன்றா, இது மலையுட்ன மடுவை ஒப்பிடுவது போன்றது என்றும், தன் சுயநலத்திற்காக அம்பேத்கருடன் மோடியை இளையராஜா ஒப்பிட்டது சரியல்ல என்றும் இது அம்பேத்கரை இழிவு படுத்தும் செயல் என்றும் பலரும் கண்டித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள கங்கை அமரனிடம் இளையராஜாவின் மோடி அம்பேத்கர் ஒப்பீடு குறித்து கேள்வி எழுப்பிய நெறியாளரை ஏய் நிறுத்துடா.. என ஆவேசமாக பேசியுள்ளார் அவர் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பல பத்திரிக்கையாளர்கள் கங்கை அமரனின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில்தான் கவிஞர் வைரமுத்து நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் பாபி சின்ஹா நடிக்கும் புதிய படத்திற்கு தடை உடை என்று பெயர் வைத்தேன், படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தேன், கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மாலை சூட்டி மகிழ்ந்தார்கள். சின்ன சின்ன கொண்டாட்டங்களை வாழ்க்கை என பதிவிட்டிருந்தார்.
அந்தப் புகைப்படம் அப்படத்தில் நடிக்கும் நாயகிகளுக்கு மத்தியில் வைரமுத்து நிற்பதைப் போன்று உள்ளது. இந்நிலையில் அந்த புகைப்படத்தை டேக் செய்த இசையமைப்பாளர் கங்கை அமரன் " கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே" என கமெண்ட் செய்துள்ளார். அவரின் இந்த கமெண்ட்ஸ் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது வருகிறது. இந்நிலையில் பலரும் கங்கை அமரனுக்கு உங்களுக்கு பயங்கர நக்கல் என்று பதிவிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். பின்னணி பாடகி சின்மயி மீடு விவகார்தில் பாஜகவினர் வைரமுத்துவை கடுமையாக விம்ர்சித்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் பாஜக ஆதரவாளரான கங்கை அமரன் வைரமுத்துவை இப்படி கிண்டல் செய்திருப்பது பலரின் கவனத்தை ஈருத்துள்ளது. இந்த விமர்சனத்தை அதிலும் பொது வெளியில் இப்படியாக விமர்சனத்தை நிச்சயம் வைரமுத்து விரும்ப மாட்டார் என்றே பலரும் கூறுகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.