
குறுகிய காலத்தில் முன்னணி நாயகியானவர் கீர்த்தி சுரேஷ். இவர் மலையாளத்தில் குழந்தை நடத்திரமாக அறிமுகமானார். பின்னர் தமிழில் 'இது என்ன மாயம்' என்னும் படத்தில் மூலம் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக தனது முதல் படத்தில் நடித்தார். ஆனால் இந்த படம் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து இவர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்ட ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட படங்கள் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.
பின்னர் இவரது வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்த படம் தான் 'மாகநடி'. இதில் நடிகையர் திலகம் சாவித்ரி போன்று வாழ்ந்து காட்டிய இவருக்கு தேசிய விருது கிடைத்தது. பின்னர் பான் இந்திய நாயகியாக பல்வேறு மொழிகளில் ஒப்பந்தமாகி வருகிறார் ஸ்=கீர்த்தி சுரேஷ்.
அதன்படி தற்போது தெலுங்கு சூப்பர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் தற்போது 'சர்காரு வாரி பாட்டா' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பருசுராம் பெட்லாவி இயக்கியுள்ளார். மாஸ், ஆக்ஷன் திரைப்படமான 'சர்காரு வாரி பாட்டா ' படத்தில் சமுத்திரக்கனி, வெண்ணெல கிஷோர் மற்றும்ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ் பாபு என்டர்டெயின்மென்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...பாரதிகண்ணம்மா நாயகியை தொடர்ந்து விலகும் நாயகன்..அடுத்த பாரதி இவர் தானாம்?
ஏற்கனவே இதிலிருந்து வெளியான கலாவதி' பாடல் ரசிகர்களை கவர்ந்தது. சித் ஸ்ரீராம் பாடியிருந்த இந்த பாடல் மூலம் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது.. வரும் மே 12-ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சார்காரு வாரி பாட்டா படத்திலிருந்து ட்ரைலர் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..samanth beatuy tips : சமந்தா அழகிற்கு இதுதான் காரணமா?..வெளியானது நாயகியின் ரகசியம்..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.