மயக்க மருந்து கொடுத்து நடிகையை பலாத்காரம் செய்த புகார்.. கைதுக்கு அஞ்சி தலைமறைவான நடிகரை வலைவீசி தேடும் போலீஸ்

Published : May 02, 2022, 03:13 PM IST
மயக்க மருந்து கொடுத்து நடிகையை பலாத்காரம் செய்த புகார்.. கைதுக்கு அஞ்சி தலைமறைவான நடிகரை வலைவீசி தேடும் போலீஸ்

சுருக்கம்

Vijay Babu : நடிகர் விஜய் பாபு விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மலையாள திரையுலகில் பிரபல தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் பாபு. இவர் தயாரித்த படத்தில் நடித்திருந்த நடிகை ஒருவர் இவர் மீது சமீபத்தில் பாலியல் புகார் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மயக்க மருந்து கொடுத்து பலமுறை தன்னை பலாத்காரம் செய்ததாகவும், நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் அந்த நடிகை புகார் தெரிவித்திருந்தார்.

நடிகையின் இந்த பரபரப்பு குற்றச்சாட்டை அடுத்து நடிகர் விஜய் பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நடிகையின் புகாருக்கு பேஸ்புக் லைவில் மறுப்பு தெரிவித்த விஜய் பாபு, அதில் சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரை பலமுறை பயன்படுத்தினார். இதன் காரணமாக நடிகர் விஜய் பாபு மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்தன.

அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் பாபு தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் துபாயில் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரபல நடிகையை காரில் கடத்தி வன்கொடுமை செய்த வழக்கில் நடிகர் திலீப் சிக்கிய நிலையில், தற்போது மேலும் ஒரு நடிகர் பாலியல் புகாரில் சிக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள நடிகர் சங்கமான AMMA-வில் செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்த நடிகர் விஜய் பாபு, பாலியல் புகாரில் சிக்கியதை அடுத்து அந்த பதவியில் இருந்து அண்மையில் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... டான்ஸால் டானுக்கு வந்த சோதனை... பிரபல நடிகர் வெளியிட்ட வீடியோவால் காப்பி சர்ச்சையில் சிக்கிய சிவகார்த்திகேயன்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?