
மலையாள திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவர் தமிழிலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி தேசிய விருது வென்ற அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியரை காணவில்லை என்றும் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பிரபல இயக்குனர் பதிவிட்டிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
பிரபல மலையாள இயக்குனரான சணல் குமார் இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : “நடிகை மஞ்சு வாரியர் கந்துவட்டிக்காரர்கள் சிலரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. இதுகுறித்து சோசியல் மீடியாவில் நான் பதிவிட்டு 4 நாட்கள் ஆகிறது. ஆனால் இதுவரை மஞ்சு வாரியரோ, அவருக்கு நெருக்கமானவர்களோ இதுகுறித்து பதிலளிக்கவில்லை.
நடிகை மஞ்சு வாரியரின் மௌனம் எனக்கு சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. மலையாள திரையுலகில் பாலின சமத்துவத்திற்காக செயல்படும் Women in Cinema Collective என்கிற அமைப்பிற்கும் மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்களும் இவ்விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர். மிகத் தீவிரமான இந்த பிரச்சனையை பலரும் நகைச்சுவையாகப் பார்க்கின்றனர்.
கேரள ஊடகங்கள் இவ்விவகாரத்தை கண்டு கொள்ளாதது போல் நடிப்பது அச்சமாக உள்ளது. தேசிய அளவில் புகழ்பெற்ற ஒரு நடிகையின் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் தொடர்பான பிரச்சனையாக இது இருப்பதனால், தேசிய ஊடகங்களும் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்”. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... Avatar 2 Trailer Leak : ‘அவதார் 2’ டிரைலர் ‘லீக்’ ஆனதும் ஜேம்ஸ் கேமரூன் செய்த சம்பவத்தால் ஆடிப்போன ரசிகர்கள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.