
ஆஸ்கார் நாயகன் ஏ. ஆர் ரகுமான் முன்பு நடிகர் பார்த்திபன் மேடையில் கோபப்பட்டு மைக்கை தூக்கி வீசிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஒத்த செருப்பு படத்திற்கு பிறகு, இயக்குநர் பார்த்திபன் இரவின் நிழல் படத்தை இயக்கியுள்ளார். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இந்த படம் 96 நிமிடங்கள் ஓடக்கூடியது. இப்படத்தில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், பிரிகடா ஆகியோர் நடித்துள்ளனர்.
நட்சத்திர பட்டாளங்கள்:
இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்த்து ஆஸ்கர் விருது பெற்ற 3 பேர் பணியாற்றியுள்ளனர். இப்படம் ரீலீசுக்கு தயாராகி வருகிறது. பார்த்திபன் இயக்குகத்தில் உருவாகியுள்ள 'இரவின் நிழல்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது.
ஏ.ஆர்.ரஹ்மான்:
இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அப்போது நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமான் மற்றும் பார்த்திபன் பேசி கொண்டிருந்தனர். இது குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பாவில் வெளியாகி இருந்தால் உலகமே கொண்டாடி இருக்கும் என்றார்.
மைக்கை தூக்கி வீசிய பார்த்திபன்:
இதையடுத்து பார்த்திபன் பேசும் போது, திடீரென பார்த்திபன் மைக் வேலை செய்யாமல் போனதால், கடும் கோபமடைந்த அவர் மைக்கை தூக்கி வீசினார். அதன் பின் தன்னுடைய செயல் அநாகரீகமானது என்று கூறி மன்னிப்பு கேட்டார்.
தேசிய விருது கிடைக்குமா?
இதையடுத்து, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நினைவு பரிசாக அவரது தாய் மற்றும் தந்தை உருவப்படம் பதிக்கப்பட்டுள்ள இசை வடிவ கேடயத்தை இயக்குநர் பார்த்திபன் வழங்கினார். முன்னதாக, பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக உருவான ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ள நிலையில், இப்படத்திற்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.