பாரத நாட்டியத்தில் குடும்ப குத்துவிளக்காக மிரள வைக்கும் லக்ஷ்மி மேனன்...இன்ஸ்டாவில் தீயாய் பரவும் வீடியோ..

Anija Kannan   | Asianet News
Published : May 02, 2022, 10:39 AM IST
பாரத நாட்டியத்தில் குடும்ப குத்துவிளக்காக மிரள வைக்கும் லக்ஷ்மி மேனன்...இன்ஸ்டாவில் தீயாய் பரவும் வீடியோ..

சுருக்கம்

Lakshmi Menon: உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள லட்சுமி மேனன், பாரத நாட்டியம் ஆடி,ரசிங்கர்களை மிரள வைக்கும் வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள லட்சுமி மேனன், பாரத நாட்டியம் ஆடி,ரசிங்கர்களை மிரள வைக்கும் வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 

லட்சுமி மேனன் ஆரம்ப கால பயணம்:

தனது 15 வயதில், கும்கி படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமான மலையாள நடிகை லட்சுமி மேனனுக்கு, தனது முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து, தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான, பிலிம் பேர் விருது, தமிழ் நாடு ஸ்டேட் அவார்டு, போன்றவை இவருக்கு கிடைத்தது.

குறுகிய கால கட்டத்திலேயே முன்னணி நடிகை:

இதையடுத்து, இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, ஜிகர்தண்டா, கொம்பன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நடிகையாக இடம் பிடித்தார். குறுகிய கால கட்டத்திலேயே முன்னணி நடிகையான அந்தஸ்தை பெற்ற, லட்சுமி மேனன் குடும்பபாங்கான கதாபாத்திரத்தை தேடித்தேடி நடித்து வந்தார். 

கவர்ச்சிக்கு ''நோ":

எவ்வளவு காசு கொடுத்தாலும் கவர்ச்சிக்கு ''நோ;'' சொல்லி விட்டதால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் சறுகளாகவே அமைந்தது. குறிப்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த  ரெக்க படத்திற்குப் பின் எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லை.

ஒரு பக்கம் படிப்பிலும், மற்றொரு புறம் நடிப்பிலும் மாறி மாறி கவனம் செலுத்தி வந்த  லட்சுமி மேனனுக்கு திருமண வயதை எட்டிய இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க தாயாராகி வருவதாக தெரிகிறது. 

 லட்சுமி மேனன் பாரத நாட்டியம் வீடியோ:

தன்னுடைய சொந்த ஊரான கேரளாவில் வசிக்கும் லட்சுமி மேனன், அங்கு டான்ஸ் ஸ்கூல் ஒன்றை நடத்தி வருகிறார். இணையத்தில் எப்போதும் ஆடிவாக இருக்கும் லட்சுமி மேனன், நடனப்பயிற்சி, உடம்பை ஸ்லிம் ஆக மாற்றி சமீபத்தில் போட்டோக்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது, உடல் எடையை குறைத்து குடும்ப குத்துவிளக்காக மாறியுள்ள லட்சுமி மேனன், பாரத நாட்டியத்தில் மிரள வைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 

மேலும் படிக்க....Dhanush: தனுஷின் கேப்டன் மில்லர் கதை..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க...ஓப்பனாக போட்டுடைத்த இயக்குநர்...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!
பாசத்தை உலுக்கிய துயரங்கள்; பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் நடந்த சோக சம்பவங்கள்!