Ajith : ஷார்ட்ஸ் மற்றும் டீசர்ட் உடன் நடிகர் அஜித் ஸ்லிம்மான தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வலிமை திரைப்படம் விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்தாலும், பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது. இதையடுத்து நடிகர் அஜித் நடிப்பில் தற்போது ஏகே 61 திரைப்படம் தயாராகி வருகிறது.
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத் தான் இப்படத்தையும் இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தில் நடிகர் அஜித், ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக வில்லன் வேடத்திற்காக நீளமாக தாடி வளர்த்து, காதில் கடுக்கன் அணிந்து இவர் புது கெட் அப்பிற்கு மாறி உள்ளார். இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
இப்படத்திற்காக நடிகர் அஜித் உடல் எடையை குறைக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், நடிகர் அஜித்தின் பிறந்தநாளான நேற்று அவர் ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. சொன்னபடியே அஜித் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறி இருக்கிறார். ஷார்ட்ஸ் மற்றும் டீசர்ட் உடன் நடிகர் அஜித் ஸ்லிம்மான தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட இரவின் நிழல்.. பிரம்மிப்பூட்டும் டீசர் - ‘ஆஸ்கர்’ கன்பார்ம் என பாராட்டும் ரசிகர்கள்