சூர்யாவுடன் ஜாலியாக சைக்கிளிங் சென்ற அஜித்... இணையத்தை கலக்கும் அன்சீன் கிளிக்

Kanmani P   | Asianet News
Published : May 01, 2022, 08:20 PM IST
சூர்யாவுடன் ஜாலியாக சைக்கிளிங் சென்ற அஜித்... இணையத்தை கலக்கும் அன்சீன் கிளிக்

சுருக்கம்

அஜித்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் இன்று சூர்யாவுடன் அஜித் சைக்கிளிங் செய்யும் காணாத புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் மாஸ் நாயகன் அஜித்தின் 51 வது பிறந்தநாள் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரின் ரசிகர்கள் அஜித்தின் ஞாபகங்களை தேடித்தேடி இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். அதோடு ரசிகர்கள் அஜித் பெயரில் அன்னதானம், ரத்த தானம் என கலக்கி வருகின்றனர்.

மறுபக்கம் திரைத்துறை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் அஜித்குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வருகின்றனர். அதோடு சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படுவது. அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்த அப்டேட்டுகள் வெளியாவது என ஒருபுறம் சென்றுகொண்டிருக்கிறது.

அந்த வகையில் அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் நடித்து வரும் படத்தை தொடர்ந்து பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அஜித் 62 வது படத்தில் நடிக்கவுள்ளார். இன்று நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன் வாலி, மங்கத்தா போன்று நாயகன்,வில்லன் என இரண்டுமாக அஜித் நடிக்கவுள்ளதாக ஒரு பிட்டு போட்டுள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிரூத் இசையமைக்கிறார். அதோடு நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. 

 அஜித் 63,64 படங்களிலும் அஜித் கமிட்டாகி விட்டதாக சொல்லப்படுகிறது. இதில் 64 வது படத்தை வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என அடுத்தடுத்து அஜித்தின் 4 படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாக  சொல்லப்படுகிறது. இதற்கிடையே அல்டிமேட் ஸ்டாரான அஜித்குமாருக்கு உலகளவில் ரசிகர் பட்டாளம் ஏராளம். ரசிகர்கள் மட்டுமல்ல அஜித்தை பிடிக்காத நடிகர்களும் இல்லை என்றே சொல்லலாம். ஐவரும் நடிக்க பிரபல நடிகர்கள் பலரும் ஆசைப்பட்டுள்ளனர் என்பது அறிந்த ஒன்றுதான்.

முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்திருந்த மங்காத்தா படத்தில் வில்லனாக விஜய் நடிக்க ஆசைப்பட்டதாகவும், கால்ஷீட் பிரச்சனையால் நடிக்கமுடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே அஜித் - விஜய் இணைந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் அஜித் - விஜய் இணைந்து நடித்திருந்தனர். அதோடு சமீபத்தில் பேட்டியளித்த வெங்கட் பிரபு மங்காத்தா 2 படத்தை அஜித், விஜய் கொண்டு இயக்க ஆசைப்படுவதாக தெரிவித்திருந்தார்.

நேருக்கு நேர், ப்ரண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் விஜயுடன் நடித்த சூர்யா, அஜித்துடன் நடிக்க தயார் என சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அஜித்-சூர்யா ஒன்றாக சைக்கிளிங் செல்லும் பழைய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் மத பாகுபாடு பார்க்கவே மாட்டார்..! நெகிழ்ந்து நெக்குறுகும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்
ஜனனிக்காக விசாலாட்சி எடுக்கும் ரிஸ்க்; சுத்துபோட்ட போலீஸ்... சிக்கினாரா குணசேகரன்? எதிர்நீச்சல் தொடர்கிறது