சிரஞ்சீவியுடன் தெலுங்கில் ரீ - என்ட்ரி கொடுக்கும் ராதிகா சரத்குமார்..இந்த முறை வேறமாறி..

Kanmani P   | Asianet News
Published : May 01, 2022, 04:45 PM ISTUpdated : May 01, 2022, 04:47 PM IST
சிரஞ்சீவியுடன் தெலுங்கில் ரீ - என்ட்ரி கொடுக்கும் ராதிகா சரத்குமார்..இந்த முறை வேறமாறி..

சுருக்கம்

90களில் சிரஞ்சீவி, ராதிகா ஜோடியாக நடித்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஹிட் அடித்திருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த ஹிட் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எண்பதுகளில் தொடங்கி தொண்ணூறுகள் வரை ஹிட் நாயகிகளின் முதலிடத்தை பிடித்து இருந்தவர் ராதிகா. தமிழில் மட்டுமல்ல தென்னிந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான ராதிகா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நாயகியாக வலம் வந்துள்ளார். ஒரு கட்டத்திற்குப் பிறகு வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு திரும்பிய ராதிகா பிரபல சன் டிவியில்  சித்தி தொடர் மூலம் அறிமுகமானவர் அதை தொடர்ந்து செல்வி, வாணி ராணி என அடுத்தடுத்த தொடர்களை தனது சொந்த தயாரிப்பில் தயாரித்து இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்திருந்தார். 

பிரபல நடிகையாக இருந்தவரும் ராதிகா தமிழ் மெஹா ஸ்டார் சரத்குமாரின் மனைவி அவர்களுக்கு ராகுல் என்னும் மகன் உள்ளார். தற்போது தென்னிந்திய மொழிகளின் பலவற்றிலும் குணச்சித்திர வேடத்தில் கலக்கி வரும் ராதிகா தயாரிப்பாளராகவும், இன்றைய பிரபல ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து தனது பதிப்பை செய்து வருகிறார்.

சிறந்த நடிகையாக மட்டுமல்லாமல் நல்ல தயாரிப்பாளராகவும்  இருந்து வரும் ராதிகா ராடன் நிறுவனத்தின் மூலம் பல தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப் படங்களையும் தயாரித்து வருகிறார். இதனிடையே மலையாளத்தில் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் காட்ஃபாதர்  திரைப்படத்திலும் நடித்து வருகிறார் ராதிகா சரத்குமார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சல்மான் கான் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தான் அடுத்ததாக தயாரிக்கவுள்ள பிரமாண்டம் குறித்து ட்வீட் செய்துள்ளார் ராதிகா. அந்த பதிவில்,'ரேடானுக்காக ஒரு திட்டத்தைச் செய்ய ஒப்புக்கொண்டதற்கு நன்றி, சிரஞ்சீவி கிங் ஆஃப் மாஸ் உடன் ஒரு பிளாக்பஸ்டர் திட்டத்தை செய்ய ஆவலுடன் காத்திருப்பதாக ட்வீட் செய்துள்ளார். முன்னதாக 90களில் சிரஞ்சீவி, ராதிகா ஜோடியாக நடித்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஹிட் அடித்திருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த ஹிட் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!
கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!