கே.ஜி.எஃப் 2 படத்தை கடுமையாக விமர்சித்த பேட்ட வில்லன்... ‘வயிற்றெரிச்சலா’ என கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்

Published : May 01, 2022, 02:52 PM IST
கே.ஜி.எஃப் 2 படத்தை கடுமையாக விமர்சித்த பேட்ட வில்லன்... ‘வயிற்றெரிச்சலா’ என கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்

சுருக்கம்

Nawazuddin Siddiqui : கே.ஜி.எஃப் 2, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களின் வெற்றியால் சினிமாவில் எதிர்பார்க்காத மோசமான மற்றங்கள் வந்துவிட்டதாக பேட்ட பட வில்லன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் நவாசுதீன் சித்திக். பாலிவுட்டில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்துள்ள இவர் ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்திருந்தார். சமீபத்திய பேட்டியில் இவரிடம், புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எஃப் 2 போன்ற தென்னிந்திய மொழி படங்கள் வட இந்தியாவிலும் வரவேற்பை பெற்று வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு அவர் பதில் கூறியதாவது : தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களை இதுவரை நான் பார்த்ததே இல்லை. அதனால் அதுகுறித்த கேள்விக்கு நான் பதில் சொல்வது சரியாக இருக்காது. ஆனால், அதிலிருந்து ஒரு விஷயத்தை மட்டும் என்னால் தெளிவாகக் கூற முடியும். ஒரு படம் வெற்றி அடைந்து விட்டால் சிறிது காலம் அப்படத்தை பற்றி மக்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். 

சமீபத்தில் கூட கே.ஜி.எஃப் 2, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களின் வெற்றியால் சினிமாவில் எதிர்பார்க்காத மோசமான மற்றங்கள் வந்துவிட்டன. ஒரு படம் சக்சஸ் ஆகும் போது இயல்பை மீறி அதனை கொண்டாடுவதும், அதேபோல் ஒரு படம் தோல்வியடைந்தால் அதனை மிகக்கடுமையாக விமர்சிப்பதும் தொடர்கதை ஆகி வருகிறது. இதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

பொதுமக்கள் உலக சினிமாக்களை அதிகம் பார்க்க தொடங்கிவிட்டதால் தரமான படைப்புகளை கொடுக்கவேண்டியது அவசியமாக உள்ளது” என நடிகர் நவாசுதீன் சித்திக் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஏனெனில் அவரை பிரபலமாக்கிய கேங்ஸ் ஆஃப் வசேபூர் திரைப்படம் சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தின் தாக்கத்தில் தான் உருவானது. அப்படிப்பட்ட படத்தில் நடித்துவிட்டு தென்னிந்திய சினிமாவை அவர் விமர்சித்துள்ளதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... HBD Ajith : ஆசை நாயகன் அல்டிமேட் ஸ்டார் ஆனது எப்படி? - அஜித்தின் அரிய புகைப்படங்களும்... ஆச்சர்ய தகவல்களும்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!