
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் டான். அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் சூரி, சமுத்திரகனி, எஸ்.ஜே.சூர்யா, பால சரவணன், ஷிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற மே 13-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் 2 வாரங்களே எஞ்சி உள்ளதால் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தில் இடம்பெறும் பிரைவேட் பார்ட்டி என்கிற பாடலை வெளியிட்டு இருந்தனர்.
அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியிருந்த இப்பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதி இருந்தார். இப்பாடல் எதிர்பார்த்த அளவு இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இப்பாடல் காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளது
இந்நிலையில், பிரைவேட் பார்ட்டி பாடலில் நடிகர் சிவகார்த்திகேயன் ஆடியுள்ள நடனம், நாய் சேகர் படத்துக்காக தான் ஆடியது போல் உள்ளது என நகைச்சுவை நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள சதீஷ், நாய்சேகர் படத்தை புரமோட் செய்ததற்காக டான் படக்குழுவுக்கு நன்றி என பதிவிட்டு உள்ளார்.
இதையும் படியுங்கள்... Vikram kamal Pair : மகள் வயது நடிகையுடன் ரொமான்ஸ்...! விக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடி யார் தெரியுமா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.