
நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் கமலின் சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசனும் தனது தந்தையின் குழந்தைப் பருவப் புகைப்படத்தைப் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கமல்ஹாசனின் பிறந்தநாளை மேலும் சிறப்புறச் செய்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான புகைப்படத்துடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாபுஜி என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வசூலில் சாதனை படைத்த கார்த்தியின் சர்தார்...எவ்வளவு தெரியுமா?
முன்னதாக கமல்ஹாசன் தனது பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கி ஆச்சரியப்படுத்தினார். 'நாயகன்' என்ற மாபெரும் படத்திற்கு பிறகு தற்போது முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ் சினிமாவின் 'உலகநாயகன்' மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் மணிரத்னம் இருவரும் இணைந்துள்ளனர். மேலும் 'KH234' என்று தற்காலிக தலைப்பும் வெளியாகியுள்ளது. இப்படத்தை கமல்ஹாசன், மணிரத்னம், ஆர்.மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் ஆகியோர் அந்தந்த பேனர்கள், ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகியவற்றின் கீழ் தயாரிக்க உள்ளனர்.
இதையும் படிங்க: குடும்பத்துடன் 68 ஆவது பிறந்தநாள் கொண்டாடிய கமல்..! இன்ப அதிர்ச்சி கொடுத்த சகோதரர் சாருஹாசன்!
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வழங்கும் இந்த படத்தின் விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இது 2024 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை கமல் வெளியிட்ட அறிக்கையில், இப்படத்தில் பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்தார். 35 ஆண்டுகளுக்கு முன்பு, நான் மணிரத்னத்துடன் பணியைத் தொடங்கவிருந்தபோது, இருந்த அதே அளவு உற்சாகத்தோடு இருக்கிறேன். இதேபோன்ற மனநிலையுடன் ஒத்துழைப்பது ஊக்கமளிக்கிறது என்றார்.
கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த மணிரத்னம், 'பிஎஸ்-1' படத்தின் அபார வெற்றியில், "கமல் சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி, பெருமை மற்றும் உற்சாகம்" என்றார். இந்தப் படத்தை வழங்குவது பெருமையாக இருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் விக்ரம் மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கமல் சாருடன் இணைந்து 'உலகநாயகன் KH 234' வழங்குவது ஒரு அருமையான வாய்ப்பு. கமல் சார் மற்றும் மணி சார் ஆகியோர் தமிழ் சினிமாவிற்கு உலகளவில் பெருமை சேர்த்துள்ளனர், மேலும் இந்த சிறந்த வாய்ப்பிற்கு நன்றி கமல் சார் என்றார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.