பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்றைய தினம், பிரபல மாடல் செரீனா எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறிய நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் படலம் துவங்கி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒரு மாதத்தை எட்ட உள்ள நிலையில், போட்டியாளர்கள் சிலர் சண்டை சச்சரவுடன் சவுண்டாக விளையாடி வந்தாலும், இன்னும் சிலர் சைலண்டாக சேப் கேம் விளையாடி வருகிறார்கள். எனவே இந்த வாரம் சேப் கேம் விளையாடுபவர்கள் நாமினேஷன் பட்டியலில் சிக்கினால் அவர்களை தான் முதலில் வெளியேற்ற வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த வாரத்தை விட, இந்த வாரம் நிகழ்ச்சி கூடுதல் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது, இன்று வெளியான புரமோவிலேயே தெரிந்தது. காரணம் டாஸ்க் ஒன்றை வைத்து அனைவருக்கும் தனலட்சுமியை பிரீ அட்வைஸ் கொடுக்க வைத்து, போட்டியாளர்களை கடுப்பேற்றினார் பிக்பாஸ். இதை தொடர்ந்து, வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் தவறாமல் நடைபெறும் நாமினேஷன் படலம் நடக்கிறது.
இதில் 70 சதவீத போட்டியாளர்கள், ஆயிஷா நடந்து கொண்ட விதத்தை குறிப்பிட்டு அவரை டார்கெட் செய்து நாமினேட் செய்கிறார்கள். இவரை தொடர்ந்து அசீம், மகேஸ்வரி, விக்ரமன், தனலட்சுமி ஆகியோர்களின் பெயர்களும் இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என கமல் முன் அடம்பிடித்த ஆயிஷா... நூல் இழையில் எலிமினேஷனில் இருந்து தப்பித்தார், இந்த வாரம் அவர் நடந்து கொள்வதை மனதில் வைத்தே இவருக்கான ஓட்டுகள் போடப்படும். அதே போல் பிக்பாஸ் வீட்டை விட்டு இவர் வெளியேற்ற பட்டாலும் அதற்காக பெரிதாக ஆயிஷா கவலை பட மாட்டார் என்றும் அவரது ஆர்மியை சேர்ந்தவர்கள் ஆயிஷாவுக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
of - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/9vUQgBYciQ
— Vijay Television (@vijaytelevision)