நடிகை ஆலியா பட் நேற்று அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில், இவரது சிறிய வயது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை ஆலியா பட் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பிரபல நடிகரும், தன்னுடைய நீண்ட நாள் காதலருமான ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான இரண்டே மாதத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை இந்த ஜோடி அறிவித்த நிலையில், அவ்வப்போது ஆலியா விதவிதமான பிரங்னென்சி உடையில் புகைப்படம் வெளிட்டு வருவதை வழக்கமாகி வைத்திருந்தார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த, ஆலியா பட்டுக்கும் - ரன்பீர் கபூருக்கும், நேற்று மாலை 12 மணியளவில் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.
Biggboss: வெளியில அனுப்பாம விடமாட்டாங்க போலயே? நாமினேஷனின் அதிகம் டார்கெட் செய்யப்படும் போட்டியாளர்!
இந்த சந்தோஷத்தை, ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதே போல் பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து இந்த தம்பதிகளுக்கு சமூக வலைத்தளத்தில் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், ஆலியா பட் ஒரு ஆண் சிங்கம் பெண் சிங்கம் மற்றும் குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, தன்னுடைய மகள் மாயாஜாலம் செய்து விட்டாள்... நாங்கள் மிகவும் ஆசீர்வதிக்க பட்டுள்ளோம் என கூறி தன்னுடைய செல்ல மகளை மகிழ்ச்சியோடு வரவேற்றார்.
ஆலியா குழந்தையை பெற்றெடுத்த பின்னர், அவரது ரசிகர்கள்... ஆலியாவின் த்ரோ பேக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிலவற்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். ஆலியா குழந்தையாக இருந்த போது, அவரது தந்தை மகேஷ் பட் மேல் அமர்ந்து விளையாடிய வீடியோ மற்றும் அவரது குழந்தை பருவ புகைப்பங்களை பதிவிட்டு தற்போது பிறந்துள்ள அவரது குழந்தையும் இதே போல் மிகவும் கியூடாக இருப்பார் என ஒப்பிட்டு வருகிறார்கள்.
குழந்தை பெற்றெடுத்துள்ள ஆலியா பட் தற்போது மருத்துவமனையில் உள்ளார். அவருடன் ரன்பீர் கபூரின், தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் உள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய நீட்டம் கபூர், ஆலியாவிற்கு பெண் குழந்தை பிறந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்திருந்தார். மேலும் ரன்பீர் கபூரும், பெண் குழந்தை தான் வேண்டும் என, ஆசைப்பட்ட நிலையில்... அவரின் ஆசை நிறைவேறியதற்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.