உங்களுக்கு 40 வயதா நம்பவே முடியவில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ஸ்ரேயா இவர் முதலில் தெலுங்கு திரைப்படமான இஷ்டம் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் இவர் நடித்த சந்தோசம் என்கிற படம் வணிகரீதியில் மிகப்பெரிய வெற்றியை கண்டது. இதனால் இவரது மார்க்கெட்டும் எகிரிப்போனது தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நாயகிகளில் ஒருவரான ஸ்ரேயா. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் படமாக்கப்பட்ட எனக்கு 20 உனக்கு 18 எனும் படத்தில் துணை வேடத்தில் தோன்றியிருந்தார். இதுதான் இவரது முதல் தமிழ் அறிமுகமாகும். இதை அடுத்து மழை படத்தில் ரவிக்கு ஜோடியாகும் வாய்ப்பை பெற்ற இவர் பாலிவுட் நாயகிகள் ரேஞ்சுக்கு கவர்ச்சி அள்ளித்தெளித்து ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார்.
மேலும் செய்திகளுக்கு...தான் கர்ப்பமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வெண்பா இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்
பின்னர் தமிழிலும் டாப் டென் நாயகி ஆகிவிட்ட ஸ்ரேயா தனுஷுடன் திருவிளையாடல் ஆரம்பம், சூப்பர் ஸ்டாருடன் சிவாஜி தி பாஸ், விஜயுடன் அழகிய தமிழ் மகன், விஷாலுடன் தோரணை, ஜீவாவுடன் ரௌத்திரம், சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இறுதியாக இவர் பிளாக் பாஸ்டர் படமான ஆர்ஆர்ஆர் படத்தில் சரோஜினியாக வந்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றார். தற்போது தமிழில் நரகாசுரன், சண்டைக்காரி அதோடு பாலிவுட், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழி படங்களை தன் கைவசம்வைத்துள்ளார். இதற்கிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரி கோஷீவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயாவிற்கு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது.
மேலும் செய்திகளுக்கு...வாவ்..சிம்புவின் வெந்து தணிந்தது காடும் இவ்ளோ நீள படமா? வெளியானது புதிய அப்டேட்
மேலும் செய்திகளுக்கு...மாயசேனாவாக சன்னி லியோன்.. தமிழ் கற்றுக் கொடுத்த இயக்குனர்
குழந்தையுடன் அவ்வப்போது அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார் ஸ்ரேயா,. சமீபத்தில் தனது 40 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ள இவர் பிறந்தநாளை கொண்டாடத்திற்காக மாலா தீவிற்கு குடும்பத்துடன் படையெடுத்துள்ளார். அங்கு எடுத்துக் கொண்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கலர் கலரான பிகினில் இவர் பகிர்ந்து உள்ள வீடியோக்களும் புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. உங்களுக்கு 40 வயதா நம்பவே முடியவில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.