வெண்பா உறங்கிக் கொண்டிருக்கிறார் அப்போது வெண்பாவிற்கு தான் கர்ப்பமாக இருப்பது போன்ற கனவு வருகிறது.
பாரதி கண்ணம்மாவில் தீவிரவாதிகளால் மருத்துவமனை ஹைஜெக் செய்யப்பட்டுள்ளது. லக்ஷ்மிதா மற்றும் தன் தந்தையின் மீது உள்ள பாசத்தால் ஹேமா ஹாஸ்பிடலுக்குள் வந்துவிடுகிறார். தீவிரவாதிகள் அவரையும் பிடித்து வைத்து விடுகிறார்கள். அந்த நேரத்தில் அமைச்சருக்கு நல்லபடியாக ஆபரேஷன் செய்து முடித்து விடுகிறார். பின்னர் ஹேமாவிடன் அப்பாவுடன் வந்த டாக்டர் கொல்லப்பட்டது குறித்து லட்சுமி தெரிவித்து கொண்டிருக்கிறார், அப்போது வெளியில் வரும் கண்ணம்மா பாரதியிடம், இருவரும் ஒருவர் மீது ஒருவர் எவ்வளவு பாசமாக உள்ளனர். இவர்களை பிரிக்க பார்த்தீர்களே ? ஹேமாவை டீசி வாங்கி வேற ஸ்கலில் சேர்க்க பார்த்தீர்களே என சொல்லி காட்டுகிறார்.
மறுபுறம் அமைச்சர் நலமுடன் ஆபரேஷன் செய்யப்பட்டது குறித்து கேள்விப்பட்ட அதிர்ச்சியில் இருந்த வெண்பா உறங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது வெண்பாவிற்கு தான் கர்ப்பமாக இருப்பது போன்ற கனவு வருகிறது. இதனால பதறியடித்து கொண்டு எழுகிறார் வெண்பா. அந்த நேரத்தில் வரும் ரோஹித், என்ன டார்லிங் நம்ம அம்மா அப்பாவாகிற மாதிரி கனவு கண்டாயா என கேட்க, கடுப்பான வெண்பா ரோஹித்தை திட்டி வெளியில் அனுப்புகிறார்.
மேலும் செய்திகளுக்கு...வாவ்..சிம்புவின் வெந்து தணிந்தது காடும் இவ்ளோ நீள படமா? வெளியானது புதிய அப்டேட்
இந்த பக்கம் தீவிரவாதிகள் கேட்டதை போல செல்வத்தை விடுவிப்பதாக போலீசார் ஒப்புக்கொள்வதால் 10 பேரை வெளியில் அனுப்ப முடிவு செய்யும் தீவிரவாதிகள் அந்த பத்து நபர்களையும் செலக்ட் பண்ணுகிறார்கள். வீட்டில் இருக்கும் சௌந்தர்யா நம்ம வீட்டில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டிருக்கிறார். அப்போது பிணை கைதிகளிடம் நாங்கள் கேட்டது போல முக்கியமான ஆளை விட்டுவிட்டார்கள் அதனால் முதலில் 10 பேரை அனுப்புகிறோம். மற்ற கோரிக்கைகள் நிறைவேறியதும் கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களை வெளியில் அனுப்புவோம் என தீவிரவாதி தெரிவிக்கிறார். அந்த 10 பேரை தீவிரவாதிகள் வெளியே அனுப்புகின்றனர். இன்றைய எபிசோடு இத்துடன் நிறைவடைகிறது.
மேலும் செய்திகளுக்கு...மாயசேனாவாக சன்னி லியோன்.. தமிழ் கற்றுக் கொடுத்த இயக்குனர்