இனி 'ராஜா ராணி 2' சீரியலில் நான் சந்தியா இல்லை..! ஷாக்கிங் வீடியோ வெளியிட்ட ரியா விஸ்வநாதன்!

Published : Feb 15, 2023, 08:16 PM IST
இனி 'ராஜா ராணி 2' சீரியலில் நான் சந்தியா இல்லை..! ஷாக்கிங் வீடியோ வெளியிட்ட ரியா விஸ்வநாதன்!

சுருக்கம்

விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும், 'ராஜா ராணி 2' சீரியலில் இருந்து, கதாநாயகியாக நடித்து வரும் ரியா வெளியேறி விட்டதாக அதிரடியாக வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.  

விஜய் டிவி தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில்,     Diya Aur Baati Hum என்கிற இந்தி சீரியலின்... தமிழ் ரீமேக்காக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் 'ராஜா ராணி 2'. மிகவும் கட்டுக்கோப்பான குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் எப்படி, தன்னுடைய பிரச்சனைகளை தகர்த்தெறிந்து, IPS அதிகாரியாக மாறுகிறார் என்பதே இந்த சீரியலின் மைய கரு.

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியலை, விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா, உள்ளிட்ட சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கி வரும் பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார். இந்த சீரியல் துவங்கப்பட்ட போது, சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர், 'ராஜா ராணி' முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ஆலியா மானசா தான்.

தளபதிக்கு நிகராக ரசிகர்களுடன் ரௌண்டு கட்டி செல்பி எடுத்து மாளவிகா மோகனன்! சமூக வலைத்தளத்தை அலற விட்ட போட்டோஸ்!

இந்த சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போதே... இரண்டாவது முறையாக கர்ப்பமாக ஆனதால், 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் போது அதிரடியாக சீரியலில் இருந்து விலகினார். இவரை தொடர்ந்து 'ராஜா ராணி 2' சீரியலில் நாயகியாக மாறினார் ரியா விஸ்வநாதன். மேலும், சந்தியா என்கிற கதாபாத்திரத்திற்கு பொருந்தி நடித்த இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், திடீர் என, ரியா இந்த சீரியலில் இருந்து தான் விலகி விட்டதாகவும், சந்தியா கதாபாத்திரத்தில் இனி வேறொரு நடிகை நடிக்க உள்ளதாகவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதே நேரம் என்ன காரணத்திற்காக ரியா சீரியலை விட்டு விலகுகிறார் என்று எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இவர் முகம் வீடியோவில் வாடி இருப்பதால், சீரியல் குழுவிடம் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே ரியா இந்த முடிவை எடுத்திருப்பார் என கூறப்படுகிறது.

'அயலி' வெப் தொடர் அம்மா நடிகை... அனுமோலின் ஹாட் கிளாமர் லுக் போட்டோஸ்!

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!