பிரபல சீரியல் நடிகை மஹாலட்சுமி சங்கர், கடந்த ஆண்டு... பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், ரவீந்தர் கவிதை மூலம், இந்த காதலர் தினத்தை சிறப்பித்துள்ளனர்.
சன் மியூசிக் தொலைக்காட்சியின் மூலம், தொகுப்பாளராக அறியப்பட்ட மஹாலட்சுமி பின்னர் சீரியல் நடிகையாக அவதாரம் எடுத்தார். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, தன்னுடைய மகன் சச்சினுடன் தனியாக வசித்து வந்த மஹாலக்ஷ்மி பின்னர், பிரபல சீரியல் நடிகர் ஒருவரின் காதலை வலையில் சிக்கி நொந்து நூடல்சான கதை எல்லாம் நாம் அறிந்ததே.
இதை தொடர்ந்து, திடீர் என கடந்த ஆண்டு ஜூன் மாதம்... பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், விமர்சகருமான... ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியானபோது, இது ஷூட்டிங்கிற்காக எடுக்கப்பட்டது என பலர் கூறிய நிலையில், பின்னர் இது உண்மையான திருமணம் தான் என்பதை அவர்களே தெரிவித்தனர். ஆரம்பத்தில் இவர்களின் திருமணம் சில விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், அனைத்து விமர்சனங்களுக்கும் துணிந்து நின்று, பதிலடி கொடுத்த இந்த ஜோடி, தற்போது காதலர் தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளது.
இருவருமே தங்களின், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள பதிவில்... வெற்றி பெற இது போட்டியும் அல்ல... வெற்றிக்கான அடையாளம் திருமணமும் அல்ல.
காதல்..!
உன் வாழ்நாள் முழுவதும் நீ சுவாசிக்கும் மூச்சு. தன்னை நேசிக்க மறந்த ஒருவனால் இன்னொரு மனிதனை நேசிப்பது கடினம். அப்படி உன்னை நேசிக்கும் நீ காதலுக்கான அடிப்படை தகுதி பெற்றவன்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பது காதல்னு சொல்வாங்க. ஆனா நிறைய எதிர்பார்ப்புகளும் இருக்கும் நிறைய விஷயங்கள் நம்ம எதிர்பார்ப்ப மீறியும் இருக்கும். அப்படி எல்லா நேரத்திலும் நம் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாய் இருந்தாலும் எந்த கணத்திலும் ஒரு நொடி கூட அந்த காதல் குறையாம இருந்தா அது தான் உண்மையான காதல்.
என் மகாலக்ஷ்மியோட காதல் அவ்வளவு உண்மையான காதல். அப்போ என்னோட காதல் உண்மையான காதலா இல்லையானு கேக்குறீங்களா?
என்னோட காதல் அவ்வளவு உண்மையான காதல் இல்லைங்க. நா மகாலக்ஷ்மிய காதலிச்ச போது இருந்த காதல் அவ்வளவு உண்மை இல்லைங்க. நா Mrs. மகாலக்ஷ்மி ரவீந்திர காதலிக்கும் போது அதுல 1% கூட பொய் இல்லைங்க. ஒரு வாழ்க்கை அழகா தெரியிறதும் ஒரு வாழ்க்கைய அழகா வாழ்றதும் நாம அடுத்தவங்க மேல வைக்குற மரியாதையும் காதல்னாலயும் தான். அப்படி எங்க ரெண்டு பேருக்கும் ரெண்டு பேரு மேலயும் அதிக மரியாதையும் காதலும் இருக்கு.
நாம நேசிக்கிற மக்கள விட நம்மல நேசிக்கிற மக்கள love பண்றதுதான் life. அந்த life தான் என் wife. Happy valentine's day dear mahalakshmi என பதிவிட்டு போதும்டி இதுக்குமேல என்னால முடியலடி. எவ்ளோ யோசிச்சாலும் இவ்ளோதான் வருது... என காமெடியாக இதனை முடித்துள்ளார்.
இதற்க்கு மஹாலக்ஷ்மி அருமையான அம்மு, அழகான வரிகள்... உங்கள் அன்பு எவ்வளவு தூய்மையானது மற்றும் உண்மையானது என்பதை நான் அறிவேன்... என் வாழ்வில் நீங்கள் வர ஆசீர்வதித்த கடவுளுக்கு என்னால் ஒருபோதும் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. என்னை வசதியாக.. பாதுகாப்பாக வைத்திருந்ததற்கும், வாழ்க்கையில் எனக்கு திசை காட்டியதற்கும் நன்றி... லவ் யூ மை பேபி... காதலர் தின வாழ்த்துக்கள்....உங்களுக்கு என பதிவிட்டுள்ளார். இவர்களின் காதல் வார்த்தைகள் தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.