தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, காதலர் தின வாழ்த்து சொல்லி வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழில் ராஷ்மிகா நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் அமோக வெற்றி பெற்றது. அப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் ராஷ்மிகா. இதையடுத்து ராஷ்மிகா நடித்த இந்தி திரைப்படமான மிஷன் மஜ்னுவும் சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது நடிகை ராஷ்மிகா நடிப்பில் தெலுங்கில் புஷ்பா 2 திரைப்படம் உருவாகி வருகிறது. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா. அதேபோல் இந்தியில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் என்கிற பான் இந்தியா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர மேலும் சில பெயரிடப்படாத படங்களும் நடிகை ராஷ்மிகாவின் கைவசம் உள்ளன.
இதையும் படியுங்கள்... ஜவானில் ‘ரோலெக்ஸ்’ மாதிரி செம்ம மாஸான கேமியோ ரோல்... விஜய் நோ சொன்னதால் பிரபல மாஸ் நடிகரை தட்டிதூக்கிய அட்லீ
இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, தற்போது காதலர் தின வாழ்த்து சொல்லி பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா. அதில் தனது செல்ல நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடி அதனை கட்டிப்பிடித்தபடி காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ராஷ்மிகா. அந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
சிலரோ காதலர் தினத்தன்று விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடியாக சேர்ந்து புகைப்படம் போடுவீர்கள் என எதிர்பார்த்ததாக கிண்டல் செய்து வருகின்றனர். ஏனெனில் நடிகை ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. ஆனால் இருவரும் அதுகுறித்து மவுனம் காத்து வருகின்றனர். அண்மையில் கூட புத்தாண்டு கொண்டாட இருவரும் ஜோடியாக மாலத்தீவுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... 600 படிகளில் சூடம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு... பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சமந்தா