Annaatthe Movie: கேஸ் போட்டது எல்லாம் வீணா போச்சு! ஒரே நாளில் உச்ச கட்ட அதிர்ச்சியில் 'அண்ணாத்த' படக்குழு!

Published : Nov 05, 2021, 05:10 PM IST
Annaatthe Movie: கேஸ் போட்டது எல்லாம் வீணா போச்சு! ஒரே நாளில் உச்ச கட்ட அதிர்ச்சியில் 'அண்ணாத்த' படக்குழு!

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) நடிப்பில், நேற்று தீபாவளி ஸ்பெஷலாக வெளியான 'அண்ணாத்த' (Annatthe) திரைப்படத்தை சட்டவிரோதமாக சமூகவலைதளங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்ட போதிலும், தற்போது முழு படமும் இணையத்தில் வெளியாகியுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.  

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிப்பில், நேற்று தீபாவளி ஸ்பெஷலாக வெளியான 'அண்ணாத்த'  திரைப்படத்தை சட்டவிரோதமாக சமூகவலைதளங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்ட போதிலும், தற்போது முழு படமும் இணையத்தில் வெளியாகியுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் (அக்டோபர் 4ஆம் தேதி) நேற்றைய தினம்  வெளியான திரைப்படம் 'அண்ணாத்த'. காளையன் என்னும் கதாபாத்திரத்தில்,  கிராமத்து ப்ரசிடெண்ட்டாக   சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள இந்த படத்தை, தல அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இயக்குனர் சிவா இயக்கியுள்ளார்.  ஏற்கனவே அஜித்தை வைத்து 'வீரம்' படத்தின் மூலம் தம்பி பாசத்தையும், 'வேதாளம்' படத்தின் மூலம் தங்கை பாசத்தையும் கண் முன் நிறுத்திய சிவா இந்த படத்தில் மீண்டும் தங்கை பாசத்தை கையில் எடுத்திருந்தார்.

மேலும் செய்திகள்: Ajithkumar: வேஷ்டி சட்டையில் வேற லெவல்.. மனைவியுடன் சேர்ந்து ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய தல அஜித்! வைரல் கிளிக்

 

அஜித்துக்கு 'வேதாளம்' படம் மூலம் கை கொடுத்த தங்கை பாசம், தலைவர் கையை கடித்து விட்டது என்று சொல்லும் அளவிற்கு, ரசிகர்கள் இந்த படத்தை விமர்சனம் செய்து வருகிறார்கள். அளவுக்கு மீறினால் இனிப்பாக இருந்தாலும் திகட்டி விடும் என்கிற உண்மைக்கு ஏற்ப, ஓவர் தங்கை செண்டிமெண்ட் தான் ரஜினி ரசிகர்களை காண்டாக்கி உள்ளது. ட்ரைலர், மற்றும் டீசரில் இருக்கும் மாஸை நம்பி திரையரங்கில் காலடி எடுத்து வைத்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

மேலும் செய்திகள்: Annaatthe Movie: சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக நடிக்க கீர்த்தி சுரேஷ் இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா?

 

அதே நேரம், குடும்பத்துடன்... படத்தை பார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு 'அண்ணாத்த' குட் சாய்ஸ் தான். எனினும் நயன்தாரா, குஷ்பூ, மீனா, ஜெகபதி பாபு, கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தும், அதனை இயக்குனர் சிவா சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே... பெரும்பாலான சினிமா விமர்சகர்களின் கருத்தாகவும் உள்ளது.

மேலும் செய்திகள்: Diwali Celebration: ராஷ்மிகா மந்தனா, ராஷி கண்ணா ஆகிய 5 இளம் நடிகைகளின் அசரவைக்கும் தீபாவளி ஸ்பெஷல் போட்டோஸ்!

 

இந்த படத்தின் பிரமாண்ட பட்ஜெட்டை நினைவில் கொண்டு, படம் சமூக வலைத்தளங்களில் வெளியானால் வசூலுக்கு வேட்டு வைத்துவிடும்என்பதை  கருத்தில் கொண்டு சன் பிச்சர்ஸ் தரப்பில் இருந்து, 'அண்ணாத்த' படத்தை சட்டவிரோதமாக வெளியிடகூடாது என இணையங்கள், மற்றும்  இணையதள சேவை, வழங்கும் நிறுவனங்களுக்கு எதிராகவழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 'அண்ணாத்த' படத்தை சட்ட விரோதமாக வெளியிட எதிர்ப்பு தெரிவித்து உத்தரவு பிறப்பித்தது.

மேலும் செய்திகள்: வான வேடிக்கை நடுவே... காதலன் நெஞ்சில் சாய்ந்தபடி தீபாவளி வாழ்த்து கூறிய நயன்தாரா! வைரலாகும் வீடியோ..

 

இந்த தீர்ப்பு படக்குழுவினரை நிம்மதியடைய செய்த போதும், நேற்று அண்ணாத்த திரைப்படம் வெளியான போதில் இருந்தே, சமூக வலைத்தளங்களில் பிட்டு பிட்டாக வெளியாகியது. இதை தொடர்ந்து படம் வெளியான ஒரே நாளில் முழு படமும் இணையதளங்களில் வெளியாகியுள்ளதால், அதிர்ச்சியில் உள்ள படக்குழுவினர் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!