இந்த பிரபலத்தின் படத்திலும் போலீசாகவே நடிக்கும் ஜெய்பீம் வில்லன்.. இவருக்கு ஏற்கனவே பலவருட ஒரிஜினல் அனுபவமாம்

By manimegalai a  |  First Published Nov 5, 2021, 2:40 PM IST

ஜெய் பீம் படத்தில் மோசமான போலீஸ்கரராக நடித்துள்ள இயக்குனர் தமிழ்  சென்னை மாநகரில் 10 ஆண்டுகள் காவலராக பணியாற்றியுள்ளார்அந்த அனுபவமே அவரை தத்துரூபா போலீசாக நடிக்க வைத்துள்ளதாக தமிழ் கூறியுள்ளார்.


நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய் பீம் இருளர்களின் வாழ்க்கையை கண் எதிரே நிறுத்தியுள்ளதாக பிரபலங்களும் அரசியல் தலைவர்களும், நடிகர்களும் பாராட்டி தள்ளுகின்றனர். இந்த படம் பழங்குடியினர் குறித்த தாக்கத்தை தனது மனதில் ஆழமாக பதிய வைத்து விட்டது என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அவரை தொடர்ந்து நடிகரும் அரசியல் தலைவருமான கமல் ஜெய்பீம் கண்களில் குளமாக்கியதாக கூறி சூர்யாவுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். இந்த படத்தின் ரிலீசுக்கு பின்னர் இருளர் இனத்துவருக்கான ட்ரஸ்டிற்கு சூர்யா - ஜோதிகா தம்பத்தியினர் ரூ.1 கோடியை முதலமைச்சரை நேரில் சந்தித்து வழங்கி இருந்தனர். இவ்வாறு சமூக வலைத்தளத்தை முழுதுமாக ஆக்கிரமித்துள்ள ஜெய் பீம் லாக்கப் டெத் என்னும் வார்த்தையின் கொடூரத்தை வேறுருவி கட்டியுள்ளதாகவே சமூக ஆர்வலர்களின்  கருத்து உள்ளது.

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் உயர்நீதி மன்ற வழக்கறிங்கர் சந்துரு போன்றோரை கௌரவிக்கும் விதமாக உள்ளது. கட்டாயம் பல விருதுகளை தட்டி செல்லும் என ரசிகர்களால் நம்மபடும் ஜெய் பீம் படத்தில் வில்லன் எஸ் ஐ குருமூர்த்தி தனது மிரட்டலான முக பாவனைகளாலேயே பார்வையார்களை அதிர வைத்து விடுகிறார். போலீஸ் என்றாலே பலருக்கும் அல்லு விடத்தான் செய்யும் அதிலும் இந்த பட போலீஸ் கேரக்டர் காவலர்கள் மீதான அச்சத்தை மேலோங்க செய்துள்ளது என்றே சொல்லாம். தனது அதட்டல் பேச்சால் மிரள விடும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் தமிழ் விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற பல படங்களில் இயக்குனர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

Tap to resize

Latest Videos

undefined

இந்த படங்களில் வரும் பெரும்பாலான காட்சிகள் காவல்துறை விசராணை, சிறையென தொடரும் அதிலும் விசாரணை படம் சிறை விசாரணை என்ற சொல்லுக்கே அதிர்வலைகளை கொடுத்த படம். இந்த படங்களில் வரும் விசாரணை சீன்களில் பெரும் பகுதி தமிழின் எழுத்துக்கள் என்றே சொல்லப்படுகிறது. பாம்பின் கால் பாம்பறியும் என சொல்வதை போல அனுபவம் இல்லாமல் இந்த கொடூர சீன்களை எப்படி சித்தரித்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? ஆமாங்க அந்த காட்சிகள் உருவாக உதவிய துணை இயக்குனர் தமிழ் உண்மையில் ஒரு போலீஸ்கரராம். 10 வருட காலம் சென்னை மாநகர காவல்துறையில் தமிழ் பணியாற்றினாராம்.

சினிமா மீதான காதலால் காவல்துறை பணியை ராஜினாமா செய்து விட்டு துணை இயக்குனராக புதிய  பயணத்தை  துவக்கிய தமிழ் அதனைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபுவை வைத்து டாணாக்காரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இதை தொடர்ந்து  பிரபல நடிகரின் படத்தை இயக்க கமிட் ஆகியுள்ள இயக்குனர் தமிழ் நடிகர் சூரியை நாயகனாக கொண்டு வெற்றி மாறன் இயக்கும் விடுதலையில் போலீஸ் ரோலில் நடித்துள்ளாராம்.

இந்நிலையில் ரசிகர்களிடம் மரண திட்டு வாங்கி வரும் குருமூர்த்தி கதாபாத்திரம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் தமிழ்;  காவலராக பணிபுரிந்த அனுபவமே தன்னை ஒரிஜினல் போலீஸ் போல தத்துரூபமாக நடிக்க உதவியாக கூறியுள்ளார்

click me!