இந்த படத்தை பார்த்த பிறகு தான் இயக்குனர் சிவாவுக்கு ரஜினி வாய்ப்பு கொடுத்தாராம்... சிவா சொன்ன அதிர்ச்சி தகவல்!

manimegalai a   | Asianet News
Published : Nov 05, 2021, 11:49 AM ISTUpdated : Nov 05, 2021, 11:51 AM IST
இந்த படத்தை பார்த்த பிறகு தான் இயக்குனர் சிவாவுக்கு ரஜினி வாய்ப்பு கொடுத்தாராம்... சிவா சொன்ன அதிர்ச்சி தகவல்!

சுருக்கம்

அண்ணாத்த படம் பார்த்து வெளியே வந்த ரஜினி, தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என கூறி இயக்குனர் சிவாவை கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளார்.

தீபாவளி திருவிழாவாக சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு இயக்குனர் சிவா கொடுத்த எமோஷனல் விருந்து அண்ணத்தா. தாயுமான அண்ணனின் அளவில்லா அன்பை சொல்லும் இந்த படம் எமோஷன் கலந்த கமர்சியல் படமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இதற்கு முன்பு இயக்குனர் சிவாவிற்கு மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்த "விஸ்வாசம்" அஜித் நடிப்பில் தாறுமாறான வெற்றியை பெற்று கொடுத்தது . மகளை பிரிந்த கிராமத்து தந்தையின் பாசத்தை உணர்ச்சி பொங்க பொங்க  பொங்கல் பரசியாக வெளியான படம் "விஸ்வாசம்". கடந்த  2019 -ம் ஆண்டு ஒரே நாளில்  ரஜினியின் பேட்டையும், அஜீத்தின் விஸ்வாசமும் இரட்டை பொங்கல் பரிசாக வெளியாகியிருந்தது. வசூல் ரீதியில் பேட்டை 250 கோடியையும், விஸ்வாசம் 204 கோடியையும் வசூலித்திருந்தது. வசூல் ரீதியில் ரஜினி படம்  முதல் இடத்தை பிடித்திருந்தாலும்,  தந்தை என்றாலே விஸ்வாசம் அஜித் என்னும் அளவிற்கு தூக்குதுரை மக்கள் மனதில் பதிந்துள்ளார்.

பல வருடம் கழித்து தந்தை மகள் இணையும் கிளைமாக்ஸ் காட்சியில் உணர்ச்சி வசப்படாதவர்களே இருக்க முடியாது. இரண்டு வருடங்கள் கழித்தும் பேசப்படும் இந்த படத்தை பார்த்த பிறகே தன்னை வைத்து படம் இயக்க ரஜினி வாய்ப்பு கொடுத்ததாக இயக்குனர் சிவா தெரித்துள்ளார். தல அஜித்தின் "விஸ்வாசம்" படத்தை பார்த்த ரஜினி சிவாவை தனது வீட்டிற்கு வரும்படி அழைத்து படம் குறித்து பாராட்டியதோடு, இருவரும் புதிய படம் ஒன்றில் இணையலாம் என கூறி சிவாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இந்த சேதியை அறிந்த சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சிவா-ரஜினி இணையும் புதிய படத்தை தயாரிக்க முன்வந்துள்ளனர். ரஜினிக்கான கதை கருவை உருவாக்க துவங்கிய இயக்குனர் குழு தங்களுக்கு கைகொடுத்த மனித உறவுகளையும், உணர்வுகளையும் மிக மிஞ்சிய அளவில் சேர்த்து உருவாக்கியுள்ளனர். யுவனின் துள்ளல் இசையும், எமோஷன் சீன்களில் வரும் இசையும் உணர்ச்சி தூண்டலாக அமைக்கப்பட்டுள்ளது. 90's  நாயகிகளான குஷ்பு, மீனாவுடன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என 4 நாயகிகளுடன் வண்ணமயமாக உருவாக்கப்பட்டுள்ள அண்ணாத்த, கீர்த்தி சுரேஷின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம்.     அண்ணன் தங்கை இடையேயான பாச மிகு தருணங்களை வெளிப்படுத்தியுள்ள இந்த படம்  முத்து, அருணாச்சலம் உள்ளிட்ட ரஜினியின் வெற்றி படங்களை கண் முன் நிறுத்துவதாகவே உள்ளது.

சமீப காலங்களாக காலா, கபாலி, பேட்டை என கேங் ஸ்டாராக சித்தரிக்கப்பட்டரஜினிக்கு ஒரு இளைப்பாறும் படமாக அண்ணாத்த இருப்பதாக ரஜினி ரசிகர்கள் மன மகிழ்ந்துள்ளனர். பிரமாண்ட பொருட்  செலவில் உருவான  இந்த படம் தமிழ் நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக  ரூ. 30 கோடிகளுக்கு மேல் பெற்று  தெறிக்க விட்டுள்ளது.

இந்நிலையில் தனது குடும்பத்துடன் படம் பார்த்த நடிகர் ரஜினி மிகுந்த மகிழ்ச்சியில் இருந்ததாகவும், தன்னை கட்டியணைத்து முத்தமிட்டதாகவும் கூறிய சிவா, இது தனக்கு இன்ப அதிர்ச்சியளித்தாக  உற்ச்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்