Suriya: இது என்ன சூர்யாவுக்கு வந்த புது சோதனை..! போலீசில் பரபரப்பு புகார்..!

Published : Dec 11, 2021, 06:49 PM ISTUpdated : Dec 11, 2021, 06:51 PM IST
Suriya: இது என்ன சூர்யாவுக்கு வந்த புது சோதனை..! போலீசில் பரபரப்பு புகார்..!

சுருக்கம்

'ஜெய்பீம்' (Jai Bhim) பட தொடர்பாக அடுத்தடுத்து பல சர்ச்சைகளை சந்தித்து வரும் சூர்யா மீது (Suriya) ... யாரும் எதிர்பாராத விதமாக புதிய போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

'ஜெய்பீம்' பட தொடர்பாக அடுத்தடுத்து பல சர்ச்சைகளை சந்தித்து வரும் சூர்யா மீது... யாரும் எதிர்பாராத விதமாக புதிய போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில்,  சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வெளியான ஜெய் பீம் படம்  ஓடிடி இணையதளத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இந்த திரைப்படம் மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது. அதே அளவுக்கு  சில சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. 'ஜெய் பீம்' படத்தில் இடம்பெற்ற காட்சியில் வில்லன் கதாபாத்திரத்திற்கு குரு என்று பெயர் வைத்ததற்கும், காலண்டரில் அக்னி கலசம் இடம்பெற்றிருந்ததும் தான்இந்த சர்ச்சைக்கு பொறியாக அமைந்து கொழுந்து விட்டு எரிய காரணம்.

மேலும் செய்திகள்: இயக்குனர் ஷங்கர் மகனா இது? கையில் பிளாக் பேன்டு.. கழுத்தில் சில்வர் செயின் என இளம் வயசு சிம்பு போலவே இருக்காரே

 

தங்களது சமூகத்தை மோசமாக சித்தரித்து காட்டுவதாக, வன்னியர்சங்கங்களும், பாமகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். இந்த சர்ச்சை தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்ட பிறகும் பிரச்சனைகள் ஓயவில்லை.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா ரூ.5 கோடி நஷ்ட ஈடு தரக் கோரி வன்னியர் சங்க வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் ஜெய்பீம் திரைப்படத்துக்கு எந்த ஒரு விருதையும் மத்திய அரசு வழங்கக் கூடாது எனவும் வன்னியர் சங்கம் கடிதம் அனுப்பி இருந்தது. இது தொடர்பாக இயக்குநர் ஞானவேலும் யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

மேலும் செய்திகள்: Lakshmi Manchu: தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காததற்கு ஒரே காரணம் இது தான்! லட்சுமி மஞ்சு ஓப்பன் டாக்!

 

அதே போல், சிதம்பரம் நீதிமன்றத்தில் வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழி ஜெய்பீம் படம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், படத்தை வெளியிட்ட அமேசான் நிறுவனத்துக்கு எதிராக அருள்மொழி இந்த வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், அவதூறு பரப்பியது, இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் மற்றும் அமேசான் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்: Gabriella: குச்சி ஐஸ் போல் இருந்த பிக்பாஸ் கேபியா இது? குட்டி நமீதா போல் சும்மா கும்முனு மாறி கொடுத்த போஸ்!

இந்த பிரச்சனை ஏற்கனவே ஒருபக்கம் சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது நடிகர் சூர்யா மீது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் முருகேசன் என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். குறவன் மக்கள் நல சங்கத்தின் தலைவரான இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது, நடிகர் சூர்யா தயாரித்து நடித்த, 'ஜெய்பீம்' என்ற படத்தில், குறவர் சமூகத்தை பற்றி இழிவுப்படுத்தி காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதனால், எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள குறவர் சமூக மக்களை, 'ஜெய்பீம்' படத்தில் இடம் பெற்றுள்ள காட்சி மிகவும் வேதனையடைய செய்துள்ளது. அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும். எங்கள் சமூகத்தின் மீது வன்கொடுமை செய்துள்ள நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். ஏற்கனவே பாமக ஒருபுறம் சூர்யாவை விடாமல் விரட்டி வரும் நிலையில்... இந்த புகார் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 புதிய படங்கள் மற்றும் வெப் தொடர்கள் மீது ரூ.4,000 கோடி முதலீடு... ஜியோஹாட்ஸ்டார் அதிரடி
மதுரை, மலப்புரம், மாண்டியாவிலிருந்து வரும் படங்களே உண்மையான தேசிய கலாச்சார சின்னங்கள்: கமல்ஹாசன் புகழாரம்