
நடிகை யாஷிகா (yashika), கடந்த ஜூலை மாதம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்தது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேறிக்காடு என்ற பகுதி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதியதில் யாஷிகா ஆனந்தின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் வள்ளி செட்டி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த யாஷிகா (yashika) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சுமார் 4 மாதமாக படுத்த படுக்கையாக இருந்த யாஷிகா, தற்போது தான் எழுந்து நடக்கும் அளவுக்கு குணமாகி உள்ளார்.
இந்நிலையில், விபத்து நடந்த சூளேறிக்காடு பகுதிக்கு சென்று அங்கு பார்வையிட்ட யாஷிகா (yashika), தன்னைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மறுபிறவி கொடுத்த அந்த பகுதி மக்களை நேரில் சந்தித்து கண்ணீ்ர்மல்க நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த இடத்தில்தான் என் தோழி பவணியை இழந்தேன். அதனால் இந்த பகுதி எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் இங்கு இருக்கும் மக்கள் என்னை காரில் இருந்து வெளியே இழுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது இப்போதும் ஞாபகம் இருக்கிறது. என் தோழி பவணியையும் அவர்கள் காப்பாற்றி இருந்தால் இன்னும் வேற மாதிரி இருந்திருக்கும். அவர்களுக்கு நன்றி சொல்ல தான் இங்கு வந்தேன். இது போன்ற நல்ல மனிதர்கள் உலகில் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. என்றார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.