கொஞ்சம் வித்தியாசமாய்.. செல்ல பிராணியுடன் கிளாமர் வீடியோ வெளியிட்ட ஷிவானி நாராயணன்

By Kanmani PFirst Published Sep 20, 2022, 5:10 PM IST
Highlights

நாயுடன் உடன் விளையாடும் ஷிவானி குட்டை டவுசர் அணிந்து கண்ணை கட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு மூலம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். அந்த சீரியலில் சினேகா அர்ஜுனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், சரவணன் மீனாட்சி சீசன் 3 யில் காயத்ரி ஆக தோன்றியிருந்தார். பின்னர் ஜோடி நம்பர் ஒன் ரியாலிட்டி ஷோவிலும், ராஜா ராணி சீசன் ஒன்றிலும், கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில தொடர்களில் இவர் தோன்றியுள்ளார்.

இதை அடுத்த கடந்த 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 4 இல் கலந்து கொண்ட சிவானிக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்தது. இந்த நிகழ்ச்சியில் இவருக்கு மிகப்பெரிய ரீச் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4 கொண்டாட்டம், பிக் பாஸ் ஜோடிகள் என்று அனைத்திலும் கலந்து கொண்ட சிவானி. பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவிற்கு பிறகு ஃபுல் டைம் கவர்ச்சி நாயகியாக மாறிவிட்டார்.

மேலும் செய்திகளுக்கு...இளையராஜா, அனிருத், யுவன், வரிசையில் விஜய் ஆண்டனி... என்ன விஷயம் தெரியுமா?

மேலும் செய்திகளுக்கு...வெள்ளை உடையில்...கவர்ச்சியால் வெறுப்பேற்றும் ஜான்வி கபூர்...க்யூட் ஹாட் போட்டோஸ்

இதனால் இவருக்கு பல பட வாய்ப்புகளும் கிடைத்தது. அதன்படி உலக நாயகன் கமலஹாசனின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருப்பார் சிவானி. பின்னர் வீட்ல விசேஷம் படத்திலும் தோன்றியிருந்தார். தற்போது விஜய் சேதுபதியின் 46வது படம், பம்பர், நாய் சேகர் ரிட்டன்  உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் ஷிவானி. 

மேலும் செய்திகளுக்கு...வெளிநாடு வாழ் தமிழர்களை மகிழ்விக்க இளையராஜா எடுத்துள்ள சூப்பர் முடிவு...என்ன விஷயம் தெரியுமா?

இதற்கிடையே மிகவும் ஷாட் உடையணிந்து எக்குத்தப்பான போஸ்களும், நடனங்களும் ஆடி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வரும் ஷிவானி. தற்போது தனது செல்லப்பிராணியுடன் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிவருகிறது.  நாயுடன் உடன் விளையாடும் ஷிவானி குட்டை டவுசர் அணிந்து கண்ணை கட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

click me!