
பிக்பாஸ் வீட்டில் நேற்றைய தினம் முதல் தலைவரை தேர்தெடுக்கும் போட்டி மற்றும், நாமினேஷன் படலம் நடந்த நிலையில் ஒரே ஒரு பிரபலத்தை தவிர மற்ற அனைவருமே நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக, கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வந்தாலும் இந்த வாரம் முதல் பிரச்சனைகள் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் தாமரைக்கும் (Thamarai Selvi) , திடீர் என பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நமீதா மாரிமுத்துவுக்கும் (Namitha Marimuthu) பிரச்சனை முட்டி கொண்டாலும் பெரிய அளவில் பேசும் படி எந்த சம்பவமும் நடக்காமல் சப்பென்று ஆகிவிட்டது.
மேலும் செய்திகள்: நாகசைதன்யாவுக்கு எங்களுக்கு என்ன உறவு என்பது நன்றாக தெரியும்? வேதனையோடு பேசிய ப்ரீத்தம் ஜூகால்கர்..!
எனினும் கடந்த ஒரு வாரமாக ஜாலியாகி நாட்களை கழித்து வந்த பிரபலங்கள், அனைவருமே நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளது மற்ற போட்டியாளர்களுக்குள் மன குழப்பத்தை ஏற்படுத்தி புதிய புதிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என தெரிகிறது. அதே போல் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்த்ததே இல்லை என்று கூறிய தாமரை செல்வி முதல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது தான் இதுவரை அங்கிருக்கும் போட்டியாளர்களாலேயே நம்ப முடியாத உண்மையாக இருந்து வருகிறது.
மேலும் செய்திகள்: ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் அட்டை படத்தில் நடிகை நயன்தாரா..! வேற லெவெல் அழகில் தெறிக்க விட்ட புகைப்படம்..!
அதே போல் இந்த வாரம் எப்படி போட்டியாளர்களை தாமரை வழி நடத்துவார் என்பதை பார்ப்பதற்கும் பலரும் ஆர்வமாக உள்ளனர். தாமரை செல்வி இந்த வார தலைவர் என்பதால், இவரை யாரும் இந்த வாரம் நாமினேட் செய்யவில்லை. மீதம் உள்ள 16 போட்டியாளர்கள் உரிய காரணத்தோடு நேற்று இரண்டு பெயரை நாமினேட் செய்தனர்.
மேலும் செய்திகள்: 10 மாத கர்ப்பத்தை மறைத்து... குழந்தை பெற்ற நடிகை ஸ்ரேயா..! ரசிகர்களை அதிர்ச்சியாகிய வீடியோ..!
இதில் அதிகப்படியாக நிறைய நபர்களால் நாமினேட் செய்யப்பட்டது இசை வாணி (Isai Vani) தான். அவர் ஃபேக்காக இருக்கிறார், அனைவருடனும் சேராமல் தனியாகவே இருக்கிறார் என பல காரணங்கள் கூறப்பட்டது. இவரை தொடர்ந்து நாமினேஷன் பட்டியலில் நடிகை பவானி ரெட்டியை (Pavani Reddy) தவிர மீதம் உள்ள 15 போட்டியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் முதலில் யார் வெளியேறுவார் என்பது அடுத்த வாரம் தெரிய வந்துவிடும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.