அரங்கம் முழுக்க தெறிக்க.. தெறிக்க..... `அண்ணாத்த' டீசர் தேதியை மாஸாக வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம்..!

Published : Oct 11, 2021, 06:39 PM ISTUpdated : Oct 11, 2021, 06:40 PM IST
அரங்கம் முழுக்க தெறிக்க.. தெறிக்க..... `அண்ணாத்த' டீசர் தேதியை மாஸாக வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம்..!

சுருக்கம்

இமான இசையில் அண்ணாத்த திரைப்படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இமான இசையில் அண்ணாத்த திரைப்படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் மூன்றாவது முறையாகவும், சிறுத்தை சிவா இயக்கத்தில் முதல் முறையாகவும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் அண்ணாத்த. ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு என மாபெரும் நட்சட்திர பட்டாளமே அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளது. இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்குவரும் என்று ஏற்கெனவே அறிவிக்கபட்டுள்ளது.

ரஜினிக்காக மறைந்த பாடகர் எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடலை அண்ணாத்த படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. அதற்கு பெரும் வரவேற்பு கிடைக்கவே, நயன்தாராவுடன் சூப்பர்ஸ்டார் ரொமான்ஸ் செய்யும் சார.. சார காற்றே பாடலும் வெளியாகியது. இரண்டு பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று யூடியூப் தளத்தில் மில்லியன் கணக்கில் பார்வைகளை கடந்துள்ளது.

இந்தநிலையில் ரஜினி ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் தேதியை படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மாஸாக வெளியிட்டுள்ளது. அதன்படி ஆயுத பூஜை தினமான வரும் 14-ம் தேதி மாலை ஆறு மணிக்கு அண்ணாத்த டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

                                                   

வழக்காமக ஆயுத பூஜை தினத்தில் ஆட்டோ நிலையங்களில் ரஜினி நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான பாட்ஷா படத்தின் நா ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன் பாடல் தான் ஒலித்துக்கொண்டிருக்கும். இந்த வருடம் அண்ணாத்த டீசரும் கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரத்தம் தெறிக்க, தெறிக்க புல்லட்டில் வீச்சருவாளுடன் ரஜினி தோன்றிய காட்சிகளை காணக் ரசிகர்கள் ஆவலாய் காத்துக்கொண்டுள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அப்பாவாக போகும் நாக சைதன்யா; சமந்தாவுக்கு கொடுக்கும் அதிரடி ஷாக்!
செத்துப் பிழைத்துள்ளேன், எதுவும் பேச விரும்பவில்லை: மனவேதனையுடன் செல்வராகவன் பேசிய உருக்கமான வீடியோ!