பிரபல நடிகர் மருத்துவமனையில் மரணம்… சோகத்தில் திரையுலகம்

Published : Oct 10, 2021, 09:20 PM IST
பிரபல நடிகர் மருத்துவமனையில் மரணம்… சோகத்தில் திரையுலகம்

சுருக்கம்

பிரபலமான கன்னட நடிகர் சத்யஜித் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 72.

பிரபலமான கன்னட நடிகர் சத்யஜித் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 72.

கன்னட திரையுலகில் நடிகர் சத்யஜித்தை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நீரிழிவு நோயால் கடுமையாக அவதிப்பட்டு கொண்டிருந்த அவர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். 650க்கும் மேற்பட்ட படங்களுக்கும் மேலாக நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர். அவரது இயற்பெயர் சையத் நிஜாமுதின்.

ஆப்தமித்ரா, புத்நஞ்சா, பிரேமாஞ்சலி என பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அதிகளவு வில்லன் கதாபாத்திரங்களையே ஏற்று நடித்தவர். அவரின் மறைவு கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  

பிரபல நடிகை சுமலதா உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!
என் வாழ்க்கையை அழிக்க இவர்கள் ரெண்டு பேர் போதும்: மர்ம முடிச்சைப் போட்ட மயில்; யார் அந்த ரெண்டு பேர்?