
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி (biggboss tamil 5) அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி மிக பிரமாண்டமாக துவங்கியது. இந்த முறை கடந்த 4 சீசனை போல் இல்லாமல், மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடிய நிலையில், திடீர் நேற்று நமீதா (namitha Marimuthu ) வெளியேற்ற பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ஏன் வெளியேறினார் என்கிற தகவல் வெளியாகாத நிலையில், அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதாக சில தகவல் வெளியானது... உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து அலசுகிறது இந்த செய்தி...
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் மட்டுமே முதல் வாரம் எலிமினேஷன் நடந்தது. அதை தொடர்ந்து வெளியான சீசன்களில் 2 ஆவது வாரத்தில் இருந்தே எலிமினேஷன் பயணத்தை பிக்பாஸ் துவங்கி வைத்தார். இந்நிலையில் பிக்போஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் இதே தான் நடக்கும் என்பது பலரது எதிர்பார்ப்பு. காரணம், நாமினேஷன் படலம் நடக்கவில்லை. அதே போல் பிக்பாஸ் வீட்டில் ஒரு தலைவரை இந்த வாரம் தேர்வு செய்யாமல், ஒவ்வொரு அணிக்கும் ஒரு தலைவர் என நியமிக்கப்பட்டனர் என்பது நாம் அறிந்ததே.
முதல் வாரம் என்பதால் போட்டியாளர்களுக்கு பெரிதாக எந்த ஒரு பிரச்னையும் நடக்கவில்லை. ஆனால் நேற்று மட்டும் தாமரை செல்வி பேசியதால் நமீதா கடுப்பாகி சில வார்த்தைகளை விட்டதில் அவர் கண்கலங்கி விட்டார். பின்னர் இந்த பிரச்னையும் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால் வரும் வாரங்களில் இதே போல் நிகழ்ச்சி செல்லாமல் பரபரப்பான சண்டைகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று திடீர் என பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான நமீதா மாரிமுத்து, தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறியுள்ளதாக நேற்று நிகழ்ச்சி துவங்கும் முன் தெரிவிக்கப்பட்டது. ஆனால் என்ன காரணத்திற்காக நமீதா வெளியேறினார் என்பது தெரிவிக்கப்படாததால், அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதாகவும், உடல் நிலை சரி இல்லை என்பது போன்ற தகவல்கள் பரவியது.
இதுகுறித்து, வெளியாகியுள்ள தகவலின் படி... நமீதாவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதாக கூறப்படும் தகவல் முற்றிலும் வதந்தி என கூறப்படுகிறது. இவருக்கு திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக அவராகவே, சுய விருப்பதோடுத்து தான் வெளியேறியுள்ளதாக அவனது நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். தற்போது சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் நமீதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம். எனினும் இது குறித்த முழு விவரம் இன்றைய தினம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.