பல மாதங்களாக உடல்நல பிரச்சனை காரணமாக சிகிச்சை எடுத்து வந்த பிரபல கன்னட நடிகர் சத்யஜித் (sathyajith) பெங்களூரு மருத்துவமனையில் இன்று அதிகாலை (ஞாயிற்றுக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 72.
பல மாதங்களாக உடல்நல பிரச்சனை காரணமாக சிகிச்சை எடுத்து வந்த பிரபல கன்னட நடிகர் சத்யஜித் பெங்களூரு மருத்துவமனையில் இன்று அதிகாலை (ஞாயிற்றுக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 72.
மேலும் செய்திகள்: கின்னஸ் நாயகி... ஜில் ஜில் ரமாமணி ஆச்சி மனோரமாவின் நினைவு தினம் இன்று..!
undefined
நடிகர் சத்யஜித்தின் உண்மையான பெயர் சையத் நிஜாமுதீன். சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக கன்னட திரையுலகில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கி, பின்னர் ரசிகர்கள் பாராட்டும் அளவிற்கு வில்லனாக பல படங்களில் மிரட்டியவர். சுமார் 650 க்கும் மேற்பட்ட கன்னடப் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் செய்திகள்: சிக்குன்னு சேலையில்... லைட்டாக இடையை காட்டி வேற லெவலுக்கு போஸ் கொடுத்த லாஸ்லியா!!
தீவிர உடல்நலக்குறைவு காரணமாக, அவர் பல வருடங்களாக நடிப்பிலிருந்து விலகியே இருந்தார். இந்நிலையில் சத்யஜித் பெங்களூரில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு கன்னட திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தொடர்ந்து தங்களது இரங்கலை சமூக வலைத்தளம் மூலமாகவும், நேரடியாக சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மேலும் இவரது இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.