சாமி சாத்தியமா இதை யாருக்கு கொடுக்குறதுனு தெரியல..!! கமல் முன் கண் கலங்கிய தாமரை..!!

Published : Oct 10, 2021, 12:49 PM IST
சாமி சாத்தியமா இதை யாருக்கு கொடுக்குறதுனு தெரியல..!! கமல் முன் கண் கலங்கிய தாமரை..!!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சி (Biggboss tamil 5) இந்த முறை, கூத்து, கானா போன்ற கலைகர்களுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளது நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தாமரை (Thamarai selvi) கமல்ஹாசனிடம் (Kamalhassan) பேசும், புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.  

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த முறை, கூத்து, கானா போன்ற கலைகர்களுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளது நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தாமரை கமல்ஹாசனிடம் பேசும், புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: படப்பிடிப்பில் நடிகை டாப்ஸிக்கு ஏற்பட்ட சோகம்..!! என்ன நடந்தது..?

அக்டோபர் 3 ஆம் தேதி அதாவது கடந்த வாரம், பிக்பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி துவங்கப்பட்ட நிலையில், முதல் வாரமாக கமல் போட்டியாளர்கள் முன், அகம் டிவி வழியாக நேற்று பேசியதை பார்த்தோம். அதே போல், நேற்றைய தினம் தவிர்க்க முடியாத காரணத்தால் பிக்பாஸ் வீட்டில் இருந்து, திருநங்கை நமீதா வெளியேறிய அதிர்ச்சி தகவலும் வெளியானது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என எந்த ஒரு அணுகுமுறையும் இன்றி, வெள்ளந்தி தனமாக விளையாடி வரும் தாமரை... தற்போது கமல்ஹாசனிடம் கண்ணீர் மல்க பேசும் காட்சி இரண்டாவது புரோமோவில் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: முதல் நாளே வசூலில் தட்டி தூக்கிய சிவகார்த்திகேயனின் 'டாக்டர்'..! இத்தனை கோடியா..?

 

கமல்ஹாசன் அவருக்கு முன்னால் யாருக்கு லைக் கொடுப்பீர்கள் அதற்கான காரணம், மற்றும் யாருக்கு டிஸ் லைக் கொடுப்பீர்கள் அதற்கான காரணம் குறித்து கேட்கிறார். அப்போது தாமரை, இந்த நிகழ்ச்சியை நான் பார்த்தது இல்லை. நான் குழந்தையில் எப்படியெல்லாம் இருக்கணும், சிரிக்கும், விளையாட வேண்டும் என ஆசை பட்டேனோ... அது எல்லாம் இங்கு நடந்தது சார் என கண்ணீருடன் கூறுகிறார். அதே போல், நான் சோகமாக இருந்தால் கூட என்னை அழைத்து ஏதாவது பேசி அண்ணாச்சி சிரிக்க வைத்து விடுவார் அவருக்கு லைக் கொடுக்க விரும்புவதாக தெரிவிக்கிறார்.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் வீட்டில் இருந்து நமீதா வெளியேற இது தான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்..!

 

டிஸ் லைக் கையில் வைத்து கொண்டு சாமி சத்தியமாக இதை யாருக்கும் கொடுக்க விருப்பம் இல்லை என அவர் கூற... இந்த புரோமோ மிகவும் கலகலப்பாக முடிவடைந்துள்ளது. ஒரே வேலை நமீதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்திருந்தால், அவருக்கு தாமரை தயக்கம் இல்லாமல் டிஸ் லைக் கொடுத்திருக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Gana Vinoth : பிக்பாஸ் விட்டு வெளியே வந்த கானா வினோத்! அசத்தலான சர்ப்ரைஸ் ..இணையத்தில் வைரல்!!
Pongal Release: முதல் படமே மெகா ஹிட்.! 9 ஆண்டுகளுக்குப் பின் தமிழ் இயக்குநரின் மாஸ் கம்பேக்.!