பொன்னியின் செல்வன் படத்திற்கு சொந்த குரலில் டப்பிங் பேசும் த்ரிஷா..!

By manimegalai aFirst Published Oct 9, 2021, 7:22 PM IST
Highlights

'பொன்னியின் செல்வன்' (ponniyin Selvan) படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தில் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

'பொன்னியின் செல்வன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தில் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான 'பொன்னின்செல்வன்' படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சிலை போல் செதுக்கியுள்ளார். மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரம், ஜெய்ராம்,  சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், பிரபு, லால், ரியாஸ் கான், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, அஸ்வின்,  த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஏ.ஆர். இசைக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டார். மிகப்பெரிய எதிர்பார்ப்பு, மற்றும் போராட்டங்களுக்கு நடுவே, சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு, மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்தது. இரண்டு பாகங்களாக இந்த படத்தை வெளியிட மணிரத்னம் முடிவு செய்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு இந்த படத்தின் முதல் பாகம் வெளியாக உள்ளது.

மேலும் பிரபலங்கள் ஒவ்வொருவராக, அவரவர் கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசும் பணிகள் தற்போது துவங்கி விட்டது. அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள தகவலில், 'பொன்னியின் செல்வன் ' படத்தில் குந்தவையாக நடித்துள்ள நடிகை த்ரிஷா அவரது கதாபாத்திரத்திற்கு அவரே டப்பிங் பேசி வருகிறாராம். ஏற்கனவே த்ரிஷா மங்காத்தா, பரமபத விளையாட்டு போன்ற சில படங்களில் சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் மற்ற படங்களை விட, இது புராதான கால படம் என்பதால்... தூய தமிழில் பேச வேண்டி இருக்கும். எனவே இப்படத்திற்கு டப்பிங் பேசுவது த்ரிஷாவிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

click me!