சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் படு ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா..! வெளியானது 'சார காற்றே' பாடல்..!

By manimegalai aFirst Published Oct 9, 2021, 6:09 PM IST
Highlights

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth)  'அண்ணாத்த' (Annaatthe) படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் (Second single) பாடல் இன்று மாலை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth)  'அண்ணாத்த' (Annaatthe) படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் (Second single) பாடல் இன்று மாலை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

மேலும் செய்திகள்: தண்ணீருக்குள் தாராள கவர்ச்சி காட்டி தாறுமாறு பண்ணும் 'பிகில்' பட நடிகை ஈஷா ரெப்பா! கிக் ஏற்றும் ஹாட் ஸ்டில்ஸ்!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள, 'அண்ணாத்த' திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, மற்றொரு புறம் இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பல படங்களில் பின்னணி பாடியுள்ள பாடும் நிலா எஸ்.பி. பி, கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காகவே, 'அண்ணாத்த' படத்தில் பாடிய அறிமுக பாடலான 'அண்ணாத்த அண்ணாத்த' பாடல் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது பாடலான 'சார காற்றே' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிச்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்: ஒரு தந்தையை போல் தம்பியை வளர்க்கும் ஆர்யன் கான்..! சகோதரரை பார்க்க முடியாமல் தவிக்கும் அபிராம்..!

 

ரஜினிகாந்துடன் ஊஞ்சலில் அமர்ந்திருப்பது போல் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்ட போதே... இந்த பாடம் மீதான எதிர்பார்ப்பு எகிறி நிலையில் தற்போது, 'சார காற்றே' பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் நயன்தாரா மற்றும் ரஜினிகாந்தின் ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.  இமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை சித்ஸ்ரீராம் மற்றும் ஷ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

click me!