வெங்கடேஷ் இயக்கத்தில் ஹாரர் படத்தில் நடிக்கும் விமல்..!

Published : Oct 09, 2021, 02:53 PM IST
வெங்கடேஷ் இயக்கத்தில் ஹாரர் படத்தில் நடிக்கும் விமல்..!

சுருக்கம்

A.வெங்கடேஷ் (A.Venkatesh Director) இயக்கத்தில் உருவாகி வரும் " ரஜினி " (Rajini Movie) படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும்  A.வெங்கடேஷ் இயக்கத்தில் விமல் (Vimal) நடிக்கும் புதிய படத்தையும்  பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறார் V.பழனிவேல் (V.Pazhanivel).

வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில் ஜீவன்,  மல்லிகா ஷெராவத், ரிதிக்கா சென், யாஷிகா ஆனந்த் நடிப்பில், வடிவுடையான் இயக்கத்தில் உருவாகி வரும்  "பாம்பாட்டம் " மற்றும் விஜய் சத்யா, ஷெரின், சம்யுக்தா நடிப்பில், A.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் " ரஜினி " படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும்  A.வெங்கடேஷ் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படத்தையும்  பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. விழாவில் நாயகன் விமல், படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தம்பி ராமைய்யா, படத்தின் இசையமப்பாளர் அம்ரீஷ், தயாரிப்பாளர் சங்க செயலாளர் ராதா கிருஷ்ணன், தயாரிப்பாளர்கள் மகேந்திர குமார்,  களாபி, பரமசிவம், முருகானந்தம், கலைமகன் முபாரக், திருமலை,  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த படம் பற்றி இயக்குனர் A.வெங்கடேஷ் கூறியதாவது...
நான் இயக்கும் முதல் பேய் படம் இது. முற்றிலும் மாறுபட்ட இது வரை யாரும் பார்த்திராத ஒரு வித்தியாசமான ஹாரர் படம் இது.
தமிழ் சினிமாவில் எத்தனையோ பேய் படங்கள் வந்திருக்கின்றன ஆனால் இது வழக்கமான பேய் படம் அல்ல முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை இதிலிருக்கும். பேய் பயமுறுத்தும் காட்சிகள் இருந்தாலும் காமெடிக்கு முக்கியத்தும் கொடுத்து ஜனரஞ்சகமான படமாக உருவாக்க இருக்கிறேன்.

விஜய் சத்யா நடிப்பில் நான் இயக்கிய 'ரஜினி' படப்பிடிப்பிற்கு ஒருநாள் தயாரிப்பாளரை பார்க்க விமல் வந்தார் அப்போது நான் இந்த படத்தின் ஒன் லைனை சொன்னவுடன் அங்கேயே தங்கி முழு கதையையும் கேட்டார். உடனே கதை மிகவும் அற்புதமாக இருக்கிறது உடனே படப்பிடிப்பை துவங்கிவிடலாம் என்று சொல்லிவிட்டார்.நாங்களும் உடனே அதற்கான வேலைகளை துவங்கி விட்டோம். மற்ற நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு துவங்கி ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒசூரில் கடும் குளிரிலும் சால்வையை போர்த்திக் கொண்டு ஒத்திகை; இளையராஜாவின் செயலை வியந்த டீம்!
அப்பாவாக போகும் நாக சைதன்யா; சமந்தாவுக்கு கொடுக்கும் அதிரடி ஷாக்!