கணவர் இறந்தது ஏன்? முதல் முறையாக தங்களுக்குள் நடந்த பிரச்சனை குறித்து பேசிய பவானி ரெட்டி..!

Published : Oct 09, 2021, 11:46 AM IST
கணவர் இறந்தது ஏன்? முதல் முறையாக தங்களுக்குள் நடந்த பிரச்சனை குறித்து பேசிய பவானி ரெட்டி..!

சுருக்கம்

பிக்பாஸ் சீசன் 5 (Biggboss Seasson 5) நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு விளையாடி வருபவர், ரெட்டை வால் குருவி, சின்னத்தம்பி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான பவானி ரெட்டி (Pavani Reddy). இவர் தற்போது முதல் முறையாக தன்னுடைய கணவர் பிரதீப் இறந்தது குறித்து, நேற்று அனைத்து போட்டியாளர்கள் மத்தியிலும் பேசினார்.  

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு விளையாடி வருபவர், ரெட்டை வால் குருவி, சின்னத்தம்பி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான பவானி ரெட்டி. இவர் தற்போது முதல் முறையாக தன்னுடைய கணவர் பிரதீப் இறந்தது குறித்து, நேற்று அனைத்து போட்டியாளர்கள் மத்தியிலும் பேசினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், தன்னுடைய பெயர் பவானி ரெட்டி என்றும், அம்மா - அப்பா வைத்த பெயர் துர்கா. திரைப்படங்கள் மற்றும் சீரியல் நடிக்க துவங்கியதும் என்னுடைய பெயரை பவானி என மாற்றி கொண்டதாக கூறினார். மேலும் திரையுலகில் தான் அறிமுகமானது குறித்து பேசிய பவானி, பின்னர் தன்னுடைய காதல் கதை குறித்து பேசினார்.

அப்போது நானும் தன்னுடைய கணவரும் காதலித்த விஷயம் வீட்டில் தெரிவித்தபோது பெற்றோர் ஒற்றுக்கொள்ளவில்லை. எனவே வீட்டை விட்டு வெளியேறி அவருடன் சுமார் நான்கு ஆண்டுகள் லிவிங் ரிலேஷன் ஷிப்பில் வாழ்தேன். பின்னர் இரு வீட்டு பெற்றோரும் எங்களுடைய காதலை ஏற்றுக்கொண்ட பின்னர் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்தது. திருமணம் ஆகி, சுமார் 6 மாதத்திற்குள் புதிய வீடு கட்டவும் துவங்கி விட்டோம். குழந்தை பெற்று கொள்வதற்காக நான் சீரியலை விட்டு விலக இருந்த கடைசி நாளுக்கு முன் தினம் என்னுடைய சகோதரர், ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டியை கொண்டாடினோம்.

அப்போது பிரதீப் கொஞ்சம் குடிச்சு இருந்தார். நான் கோவப்பட்டேன். பின்னர் ஸ்மோக் பண்ண வேண்டும் என கூறியதால் ஒரு சிறு வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால், கோவப்பட்டு எங்களுடைய அறைக்கு சென்று விட்டார். நான் மற்றொரு அறையில் தூங்கினேன். அவர் திடீர் என, என்ன நினைத்தார் என தெரியவில்லை. தன்னுடைய புடவையை எடுத்து ஃபேனில் போட்டு இறுக்கி கொண்டார். ஆனால் அவர் தூங்கி விட்டார் என்று தான் நான் நினைத்தேன்.

மறுநாள் காலையில் ஷூட்டிங் டைம் ஆனதும் நான் கதவை தட்டியபோது அவர் திறக்கவே இல்லை. அண்ணனை அழைத்து வந்து பார்த்தபோது, அந்த புடவையில் முடுச்சு கூட போடவில்லை. எப்படி இறுக்கி கொண்டார், அவர் இறந்திருப்பார் என அவருக்கே கூட தெரியாது என்று தான் நினைக்கிறன் என கூறி அழுது அனைவரையுமே சோகத்தில் மூழ்கடித்தார்.

அதே போல் தன்னுடைய கணவர் இறந்த போது, எனக்கு அழுகை வரவில்லை. அவர் மேல் கோவம் தான் வந்தது. நிறைய கஷ்டப்பட்டோம், நிறைய கனவுகள் கண்டோம் ஆனால் பாதியில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். அவரை நான் ஒரு குழந்தை போல் தான் பார்த்து கொண்டேன் என்கிறார். அவர் இல்லாமல் வாழவே முடியாது என்கிற சூழலில் அதில் இருந்து தன்னை மீட்டு வந்தது விஜய் டிவி கொடுத்த சின்னத்தம்பி சீரியல் வாய்ப்பு என தெரிவித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?