ஜெயிலில் களி தின்ன சென்ற ஷாரூக் மகன் ஆர்யன் கான்… சிறையில் ஆர்யனுக்கான கட்டுப்பாடுகள் என்ன?

By manimegalai aFirst Published Oct 8, 2021, 8:02 PM IST
Highlights

ஆர்யன் கான் சிறையில் அடைக்கப்படுவதை தடுக்க ஷாருக்கான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டதை அடுத்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆர்யன் கான் சிறையில் அடைக்கப்படுவதை தடுக்க ஷாருக்கான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டதை அடுத்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நடத்திய புகாரில் இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள், தோழி கைது செய்யப்படனர். அவர்களை விசாரிக்க தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது. விசாரணை முடித்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அதிகாரிகள், மேல் விசாரணைக்கு அனுமதி கேட்டனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

இந்தநிலையில் கொரோனா பரிசோதனைக்காக போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கட்டுப்பாட்டிலேயே ஆர்யன் கான் வைக்கப்பட்டிருந்தார். இதனிடையே சிறை செல்வதற்கு முன்பே ஆர்யனை ஜாமீனில் வெளிகொண்டுவர அவரது தந்தை ஷாருக்கான் பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆர்யன் கான் உள்ளிட்டவர்களின் ஜாமின் மனு விசாரணைக்கு ஷாருக்கானே நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார். ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஜாமின் வழங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அனைவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

இதனிடையே, ஆர்யன் காண் உள்ளிட்டவர்களுக்கு நடைபெற்ற கொரோனா பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் என்றே முடிவு வந்தது. இதையடுத்து அனைவரும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் சிறைச்சாலையில் ஆர்யன்கானுக்கான விதிமுறைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாயில் கருவறையில் இருந்து வெளிவந்த நாள் முதல் தங்கத் தொட்டிலும், தங்கக் கட்டிலும் உல்லாச வாழ்க்கை அனுபவித்து வந்த ஆர்யன் கான், சிறைச்சாலையில் ஆறு மணிக்கே எழ வேண்டும். அவருக்கு காலை உணவு 7 மணிக்கு வழங்கப்படும். 11 மணிக்கு மதிய உணவும், மாலை ஆறு மணிக்கு இரவு உணவும் வழங்கப்படும். சப்பாத்தி, உப்புமா, பருப்பு சாதம் மட்டுமே உணவுகளாகும். இரவு உணவை மட்டும் கைதிகள் விரும்பினால் 8 மணிக்கு சாப்பிடலாம். சாப்பிட்டு முடித்த பின்னர் தட்டை ஆர்யன் கானே எடுத்துச் செல்ல வேண்டும். மாலை ஆறு மணிக்கு மேல் ஆர்யன் கானை யாரும் சந்திக்க முடியாது என்றும் விதிமுறைகள் தெரிவிக்கின்றன.

click me!